பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர் கல்வி மனிதன் பெறக்கூடிய கல்விக்கு எல்லையே இல்லை என்னும் வாழ்வளிக்கும் நம்பிக்கையின் பேரில், சோவியத் ஆட்சி உருவாக்கியுள்ள பன்முகக் கல்வி மாளிகையின் உச்சி, உயர் கல்வி நிலையங்களாகும். வல்லுநர்களேயும் ஆய்வாளர்களையும் ஆயத்தம் செய்வதிலும் அடிப்படை, தொழிற் சார்பு, ஆய்வுகளை வளர்ப்பதிலும் உயர் கல்வி நிலையங்கள் ஆற்றியுள்ள பணி மிகப் பெரிதாகும். ஜாரின் கொடுங்கோல் ஆட்சி விதித்த, முடம்ாக்கும் கட்டுப்பாடுகளைத் தாண்டி, பொருளாதாரத்திலும் கலை யியலிலும் பின்னடைந்து கிடந்த, போதிய உயர் கல்வி நிலையங்கள் இல்லாத முற்காலத்திலேயே, இரஷ்ஷிய அறி ஞர்கள், மனித அறிவுக் கருவூலத்தை பெருமளவு வளப் படுத்தினர்கள். இரஷ்ஷியப் புரட்சியின் அறிஞர்களை உருவாக்கியதில், உயர் கல்வி நிலையங்களுக்கு மகத்தான பங்கு உண்டு. லெனினுடைய புரட்சி நடவடிக்கைகளே, காசான் பல்கலைக் கழகத்தில் பூத்தன. கல்வி போதிப்ப தில் மதிப்புமிக்க அனுபவத்தை, இரஷ்ஷிய உயர் கல்வி நிலையங்கள் சேமித்துள்ளன. கடந்த காலத்திலிருந்து பெற்ற முற்போக்கு மரபுகளை, சோவியத் உயர் கல்வி, வளர்த்துக் கொண்டிருக்கிறது. புதிய சோவியத் ஆட்சிக்கு எதிரில் பல சிக்கல்கள் எழுந்து மிரட்டிய போதிலும், ஆட்சி தொடக்கம் முதல், உயர் கல்வியை வளர்ப்பதற்கும் அதை எல்லார்க்கும் கிடைக்கச் செய்வதற்கும் வேண்டிய அனைத்தையும் செய் தது: இன்றும் செய்கிறது. இரஷ்ஷியப் பல்கலைக் கழகங் களில் நடை பெற்ற பாட திட்டங்கள் பற்றியும் அவற் றின் ஆய்வுகள் பற்றியும் லெனினுக்கு சிறந்த கருத்து 75