பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்டு. இவற்றைத் தொடர்ந்து வளர்ப்பதோடு வளப் படுத்துவது தேவை என்பது லெனினுடைய கருத்து. லெனின், பல்கலைக் கழகங்களுக்குப் பேராதரவு தந்தார். 1919 ஜனவரியில்-அக்டோபர் புரட்சியின் இரண் டாண்டுக்குள்-லெனின் தலைமையில் நடந்த மக்கள் ஆன அவை, (அமைச்சரவை) ஆறு புதிய பல்கலைக் கழகங்களை நிறுவ முடிவு செய்தது. புதுப் புது பல்கலைக் கழகங்களை அமைக்கும் முயற்சி, சென்ற அறுபது ஆண்டுகளாகத் தங்கு தடையின்றி ஒடுகிறது. உயர் கல்விக்கான வாய்ப் புக்களே மேலும் மேலும் வளர்க்க வேண்டுமென்னும் கொள் கையைப் பின் பற்றியதன் விளைவாக, ஜார் காலத்தில், பல்கலைக் கழகத்தைப் பற்றிக் கனவு கூட கண்டிராத பெரும் நிலப் பரப்புகளில், தனித்தனிப் பல்கலைக் கழகங் கள் வந்து விட்டன. சோவியத் ஆட்சியில் ஒவ்வோர் ஒன்றியக் குடியரசிலும் சில தன்னுட்சி உரிமைக் குடியரசு களிலும் பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டன. இப்பல் கலைக் கழகங்கள், குடியரசு மொழியிலோ, தன்னுட்சி உரிமைப் பகுதியின் மொழியிலோ கல்வி கற்பிக்கின்றன. 1917-இல் நடந்த அக்டோபர் புரட்சிக்கு முன்பு, இப் போது, பைலோ இரஷ்ஷியா, உஸ்பெக், கலாக், ஆலெர் பெய்சான், மொல்தேவியா, கிர்கிஸ், தாஜிக், அர்மீனியா, துருக்மன் குடியரசுகள் என்று அழைக்கப்படும் பெரும் பரப்பில் பல்கலைக் கழகங்கள் இல்லை. இப்போது, இக் குடியரசுகளுக்கென்று, தனித்தனி பல்கலைக் கழகங்கள். தொண்டு செய்கின்றன. புரட்சிக்கு முந்திய இரஷ்ஷியாவில், 43,000 மாளுக் கர்களைக் கொண்ட 13 பல்கலைக் கழகங்கள் இருந்தன. இன்று சோவியத் ஒன்றியத்தில் 63 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவற்றில் 6, 00, 000 பேர் சேர்ந்துள்ளார்கள். பல்கலைக் கழகக் கல்வியைப் பெருக்குவதும் முன் னேற்றுவதும் சோவியத் ஒன்றியத்தின், சமூக இயல், கலையியல் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ளது. மக்கள் இனம் சேர்த்து வைத்துள்ள அறிவினை பாட்டாளிகளுக் கும் குடியானவர்களுக்கும் வழங்க வேண்டுமென்று லெனின் .76