பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்பிட்ட பிரிவுகளின்பால ஈடுபாடு கொண்டுள்ளன; பிந்தியவைகளின் நடைமுறைகளில் தொழிற் சாயல் இருக்' கும். எடுத்துக் காட்டாக, பொறியாளர்களைப் பயிற்று விக்கத் தனி நிலையங்களும் உலோக இயல் வல்லுநர்களே உருவாக்க வேறு நிலையங்களும் இயந்திர அமைப்பாளர் களைப் பயிற்றுவிக்க பிறிதொரு வகை நிலையங்களும், அனல் பொறியாளர்களை ஆயத்தம் செய்யும் நிலையங்கள் வேருகவும் மருத்துவம், வேளாண்மை ஆசிரியத் தொழில் கிளுக்குப் பயிற்றுவிக்கும் உயர் கல்வி நிலையங்கள் தனி யாகவும் உள்ளன. சில பயிற்சிகளைப் பல்கலைக் கழகங் களிலும் தனி உயர் கல்வி நிலையங்களிலும் பெறலாம். ஆசிரியப் பயிற்சி, அத்தகையவற்றில் ஒன்ருகும். உயர் கல்வி, சிறப்புப் பயிற்சி உயர்நிலைப் பள்ளிக் கல்வி ஆகியவற்றின் ஒன்றியத் துணை அமைச்சரான தோழர் புரோகோ பீவ், உயர் கல்வியின் நோக்கத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகிருர்: உயர்கல்வி நிலையங்கள் அறிஞர்களே உருவாக்கு கின்றன. கூர்ந்த மதியுடைய மாளுக்கர்களே, மிகவிரிந்த வட்ட மக்களிடமிருந்து ஈர்க்க இயல்வதைப் பொறுத்து அவற்றின் தரம் அமையும். அப்படி ஈர்க்கையில், அவர் களுடைய பொருள் நிலையோ, சமுதாய நிலையோ, இனமோ, கணக்கிற்கு வரக்கூடாது. நுழைவிற்குத் தேவை யான அறிவினைப் பெற்று விட்ட அனைவருக்கும் உயர் கல்வி எட்ட வேண்டும் என்பது நம்முடைய கருத்தாகும்.' நாட்டின் பொருளியலில், மரபுத் தொழில்களுக்கும் புதிய தொழில்களுக்குமான நுட்பப் பயிற்சி உடையவர் கள், மேலும் மேலும் தேவைப்படுகிருர்கள். இத்தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இத்தேவையைச் சமாளிக்கவும் தேவையான அறிவினையும் உறுதியையும் பெற்றுள்ள அனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதற்கும் வகை செய்ய, சோவியத் ஒன்றியம் மலையென நிதி உதவி செய்கிறது. 1914-15 இல் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்கள் 105 ஆக இருந்தன. எழுபது களுக்குள் இவை, 800 ஆகப் பெருகி விட்டன. அதைப் 78