பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலவே, ஜார் காலத்தில் 127 ஆயிரம் பேர் பயின்றது மாறி, 1972-73 இல் 4600 ஆயிரம் பேர் பயிலும் அள விற்கு வளர்ந்து விட்டதைக் காண்கிருேம். சோவியத் பல்கலைக் கழகங்களுக்கு உயர்ந்த மதிப்பும் புகழும் உண்டு. இந்நிலையங்களில் பணிபுரிவோரே, நாட் டில் மிக உயர்ந்த சம்பளம் வாங்குவோராக இருக்கிருர் கள். இவற்றின் சோதனைக் கூடங்களும் நூலகங்களும் பெருமளவில் வளமாக நிரம்பி உள்ளன. சோவியத் பல் கலைக் கழகங்கள், பெரிய அமைப்புகள்; இவை ஒவ்வொன் றிலும் பயில்வோர் எண்ணிக்கையும் பெரிது. இருப்பினும் இவற்றைப் பார்வையிடும் எவரும் இங்குள்ள கல்வி மணத் தால் கவரப்படுவார்கள். குடியரசுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் அக் குடியரசைச் சேர்ந்த மாளுக்கர்களே அதிகமாகச் சேரு வார்கள். மாஸ்கோ அரசு பல்கலைக் கழகம், லெனின் கிராட் பல்கலைக் கழகம், கீவ் பல்கலைக் கழகம் போன்ற வற்றில், மிகப் பல குடியரசுகள், தன்ட்ைசி உரிமைப் பகுதிகள் முதலியவற்றைச் சேர்ந்த மாளுக்கர்கள் இருக் கிருர்கள். மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பயில்வோரில் நூற்றுக்கு நாற்பது விழுக்காட்டினர். சோவியத் ஒன்றி யத்திலுள்ள பல, பிற தேசிய இனங்களைச் சேர்ந்தவர் கள். இவர்கள், பிற்காலத்தில், பல்வேறு துறைகளின் தலைமைகளுக்கு வரக்கூடுமாகையால், நாடு முழுவதும் புகழ் பெற்ற பல்கலைக் கழகத்தில் பயில்வது நாட்டின் ஒருமைப் பட்டின வளர்ப் பதில் பெருந்துணையாகும். நாட்டின் பொருளியல் தேவைகளையும் பல்கலைக்கழ கங்களில் சேர்க்கும் மாணுக்கர் எண்ணிக்கையையும் நேரடி யாகத் தொடர்பு படுத்தியுள்ளார்கள். எனவே பல்கலைக் கழகங்களில் சேர, பலத்த போட்டியுண்டு: சேர்ப்பதும் பொறுக்கியெடுத்தே. உயர்நிலைப் பள்ளி அல்லது சிறப்புப் பயிற்சி உயர்நிலைப் பள்ளித் தேர்வுகளில் வெற்றி பெற்ற வர்கள் அனைவரும் பல்கலைக் கழகத்திலோ உயர் கல்விக் கழகத்திலோ சேரத் தகுதி உடையவர்கள் ஆவார்கள். நான்கு பாடங்களில் எல்லோருக்கும் தேர்வு நடக்கும். 79