பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதில் பெற்ற மதிப் பெண்களையும் உயர்நிலைப் பள்ளிக் சாதனைகளையும் கணக்கில் கொண்டு, சேர்க்கை (Բtկ օվ செய்யப்படும். மிகப் பெரும்பாலான பல்கலைக் கழகங் களில், சராசரி மூவரில் ஒருவருக்கே இடம் கிடைக்கிறது. முழுநேரக் கல்விக்கு இடம் கிடைக்கா விட்டாலும் பாதக மில்லை. பின்னர், பகுதி நேரக் கல்வியையோ அஞ்சல் கல்வியையோ பெற்று, தங்கள் அறிவினையும் தகுதியையும் உயர்த்திக் கொள்ளலாம். பாட்டாளிகளுக்காக ஏற்பாடு செய்யப்படும் பணியிடைப் பயிற்சியும் அவர்களுக்கு உதவும். உயர் கல்வி வழிகள் எப்போதும் திறந்திருக்கும். கலை, கல்வி வாய்ப்புகளேப் பெருக்கி, சமுதாய நீதியை வளர்ப்பதற்கு, சோவியத் ஆட்சிக் காலத்தில் நடை முறைக்கு வந்த பகுதி நேரக் கல்வி முறை பயனுடைய தாக இருக்கிறது. இம்முறை, ஏதாவதொரு காரணத் தால் முழு நேரப் படிப்பில் ஈடுபட முடியாதவர்களுக்கும் உயர் கல்வி உட்பட எல்லாக் கல்வியும் எட்டுவதற்கு வழி செய்கிறது. ஒவ்வொரு சோவியத் குடிமகனும் மகளும் தனது ஆற்றல்களே வளர்த்துக் கொண்டு, விருப்ப்மான பயிற்சியைத் தொடர, பகுதி நேரக் கல்வி வழிசெய்கிறது. உயர் கல்விக் கழகங்கள் அன்ருடம் போய் வரும் தொலைவில் இருந்தால், பகுதி நேரக் கல்வி வசதியாக இருக்கும். அக்கழகங்களுக்கு, நெடுந் தொலைவில் வேலை செய்யும் ஏராளமான தொழிலாளிகளுக்கும் குடியானவர் களுக்கும் அஞ்சல் கல்வி பயன்படுகிறது. அண்மைக் காலத்தில் பகுதி நேரக் கல்வியும், அஞ்சல் படிப்புபே ஏராளமான இளம் பாட்டாளிகள், கழக, பல் கலைக் கழகப் பட்டங்களைப் பெறுவதற்கு உதவியுள்ளன. அது போக, ஒருவருக்கு தொடர்புடைய மற்ருெரு துறை யில் கல்வி தேவைப்படுமால்ை அதையும் பட்டதாரிகள் பெறுவதற்கு இவ்விரு முறைகளும் ஏதுவாகின்றன. எடுத்துக் காட்டாக, பொறியாளர் ஒருவர், பொரு ளியல் பாடத்திலோ கணிதத்திலோ, பகுதி நேரப் படிப் பின் மூலம் பட்டம் அல்லது சான்றிதழ் பெறக் கூடும். 80