பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முழு நேரக் கல்வியை விட பகுதி நேரக் கல்வியும் அஞ்சல் கல்வியும் இயற்கையாகவே கடினமாக இருக்கும்: சோவியத் ஆட்சி இதைக் கருத்தில் கொண்டு, வேலை செய்து கொண்டே படிப்போர்க்கு சில சலுகைகளைக் கொடுத்திருக்கிறது. சோதனைக் கூடங்களில் பயிற்சி பெறும் போதும் தேர்வுகளுக்குச் .ெ ச ல் லு ம் போதும் அவர்களுக்கு சம்பளத்தோடு கூடிய விடுமுறை உண்டு. அஞ்சல் கல்வித் தேர்வுக்குச் செல்லும்போது, பயணச் செலவில் ஒரு பகுதியை அரசே ஏற்றுக் கொள்ளுகிறது. அஞ்சல் கல்விக்காக, பல இடங்களில் வலே பின்னி யது போல், கல்வி மையங்களும் பாடஞ் சொல்லும் மையங்களும் உள்ளன. ஒர் ஊரில் அஞ்சல்வழி பயில்வோர் இரு நூறு பேர்கள் இருந்தால், அங்கே அத்தகைய மையங்களை நிறுவுவார்கள். அஞ்சல் கல்வி முறை வானெலி யையும் தொலைக் காட்சியையும் பெருமளவு பயன்படுத்து கிறது. பல்கலைக் கழகங்களும் உயர் கல்விக் கழகங்களும், பாட்டாளி மாணவர்களுக்கு புதிதாக உயர்நிலைப் பள்ளி களில் தேறியவர்களோடு சமத்துவமாக போட்டியிட உதவும் பொருட்டு, ஆயத்தத் துறைகளே அமைத்துள்ளன. அத்துறைகள், தொழிலாளர்களுக்கும் பயிர்த் தொழி லாளர்களுக்கும் முன்னுள் படை வீரர்களுக்கும் நுழைவுத் தேர்வுகளுக்கான ஆயத்தப் படிப்பை சொல்லிக் கொடுக் கின்றன. முழு நேரப் படிப்பிற்குச் சேருவோர், 35 வயதிற்கு உட்பட்டிருக்க வேண்டும். பகுதி நேரக் கல்விக்கும் அஞ்சல் கல்விக்கும் வயது வரம்பு இல்லே. பல்கலைக் கழகங்களிலும் பிற உயர் கல்விக் கழகங் களிலும், கல்வி எல்லோர்க்கும் இலவசம். கற்பிப்பது மட்டுமா இலவசம்? நூலகம், சோதனைக்கூடம், தொழிற் பயிற்சிக்கூடம், விளையாட்டு, கலைக்கூடம் ஆகியவற்றிற் காகவும் கட்டணம் வாங்குவதில்லை. மேலும் பல்கலைக் கழகங்களில் பயில்வோரில் நூற்றுக்கு எண்பது விழுக்காட் டினருக்கும் உயர் கல்விக் கழகங்களில் எல்லா மாளுக் கருக்கும் உதவித் தொகை உண்டு. உதவித் தொகை, 81