பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

". ஆணருககு ஆனது మALLIf f கயது. P_r{{י ללא גלא குனய மத அனயை ஆ , - அடிப்படைத் தேவைகளுக்கு உதவித் தொகை போதும். சிறந்த மாணவர்களுக்கு அதிக விகிதத்தில் உதவித் தொகை கிடைக்கும். அது, வசதியாக வாழ்வதற்குப் போதும். கல்வி நிலைய உணவுச்சாலைகளில் கிடைக்கும் உணவுப் பண்டங்களுக்கு அடக்க விலைக்கும் குறைத்தே வாங்கு கிருர்கள். பாக்கியை அரசு உதவுகிறது. சோவியத் நாட்டி லுள்ள மற்ற குடி மக்களைப் போன்று, மானுக்கர்களுக்கும் இலவச மருத்துவ வசதி உண்டு. - உயர் கல்வி நிலையங்களில் ஆண்பாலரும் பெண் பாலரும் உடனிருந்து பயில்கிரு.ர்கள். சாதாரணமாக, பொது மக்களில் ஆண்களும் பெண்களும் என்ன விழுக் காட்டில் இருக்கிருர்களோ அதே விழுக்காட்டில் உயர் கல்வி நிலையங்களில் சேர்ந்திருக்கிருர்கள். ஆயினும் மருத் துவம், ஆசிரியர் பயிற்சி போன்றவைகளில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகமாகச் சேர்ந்திருக்கிருர்கள். பல்கலைக் கழகத்தில் முதற் படிப்பு ஐந்தாண்டுக் கல்வியாகும். மருத்துவம், பொறியியல் பட்டங்களுக்கான படிப்புக் காலம் மேலும் நீளமானது. மருத்துவப் பட் டத்திற்கு ஆருண்டு கற்று வெற்றி பெற்ற பின், ஒராண்டு பெரிய மருத்துவ சாலையில் உறையுள் பயிற்சி பெற வேண்டும். பல்கலைக் கழகங்களிலும் பிற உயர் கல்விக் கழகங் களிலும் மேற் பட்டம் பெற, சாதாரணமாக மூன்ருண்டு கள் பயில வேண்டும். அதில் தேர்ச்சி பெற்ருல் விஞ்ஞான மேற் பட்டம் பெறலாம். சாதாரண மாணவர்களைக் காட்டிலும் ஒராண்டு அதிகமாக, பகுதி நேர அஞ்சல் வழி மாணவர்கள் படிக்க வேண்டும். கல்வியாண்டு. இது அரையாண்டுகளாக (செமஸ் டர்களாக) பிரிக்கப்பட்டுள்ளது. வகுப்புகளுக்கு வருகை யும் வீட்டு வேலைகளைச் செய்து முடித்தலும் கட்டாயம். ஒவ்வொரு கல்வியாண்டின் முடிவிலும், சாதாரணமாக நான்கைந்து தேர்வுகள் உண்டு. தேர்வுக் காலம் மூன்று நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம். எல்லா வீட்டு 82