பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர்களாக நிய மித் த் ஸ். :് பெண்களுக்கென்று இரண்டு ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளே இருந்தன. o--- o - ੋ o-o-o-o-o-o: *、 சோவியத் ஆட்சி; இளம் பருவத்திலேயே சமாளிக்க வேண்டியிருந்த மிகக் கடினமான பிரச்சினைகளில் ஒன்று, முந்திய இரஷ்ஷியப் பேரரசில் குடி மக்கள் அனைவரும் தற்குறிகளாகவும் கலை நிலையில் பின்னடைந்தும் இருந்த பகுதிகளில் பள்ளி ஆசிரியர்களைக் கண்டு பிடிப்பதாகும். நாட்டின் பல்வேறு பகுதிகள், கல்வியில் அடைந்துள்ள வெவ்வேறு நிலை வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு, நீக்குப் போக்கிற்கு இடமளிக்கும் வெவ்வேறு நடவடிக்கைகளே சோவியத் அரசு மேற்கொண்டது. அவ்வழிகளில், எல்லார்க் கும் கல்வியை எட்ட வைப்பதில் வெற்றி பெற்றது. o ஒவ்வோர் ஒன்றியக் குடியரசும் ஆசிரியப் பயிற்சிக் கல்லுரரிகளை அமைத்தது. சூழ்நிலையின் கட்டாயத்தால், குறுகிய கால ஆசிரியப் பயிற்சி முறைகளும் மேற் கொள் வளப்பட்டன. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாத பகுதி களிலும் ஆசிரியப் பயிற்சி தொடக்க நிலையில் இருந்த பகுதி களிலும் மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. இது தொல்லையாக இருந்தது. சில ஒன்றியக் குடியரசுகளிலும் தன்னுட்சி குடியரசுகளிலும் சமயப் பழக்கமும், வழி வழி வ ந் த வெறுப்புகளும் பெண்கள் ஆசிரியப் பயிற்சிக்கு வர முடி யாதபடி தடைக் கற்களாயின. இவற்றைச் சமாளிக்கும் பொருட்டு, பெண்கள் மட்டுமே பயிலும் ஆசிரியப் பள்ளி களும் நிலையங்களும் நிறுவப்பட்டன. இப்போது, சோவியத் கல்வி நிலையங்களுக்கு ஆசிரி யர்களைப் பயிற்றுவிப்பதில், 411 ஆசிரியப் பள்ளிகளும், 20: ஆசிரியக் கல்விக் கழகங்களும் ஈடுபட்டுள்ளன. எல்லா ஒன்றியக் குடியரசுகளும் தங்கள் தேவைகளுக்கான ஆசிரி யர்களைப் பயிற்றுவிக்கின்றன. இரஷ்ஷிய கூட்டாட்சிக் குடியரசைச் சேர்ந்த 16 தன்னுட்சிக் குடியரசுகளில் ஆசிரி யப் பள்ளிகள் வலே விரித்தாற்போல் இயங்குகின்றன. மற்ற கல்வி நிலையங்களில் நடப்பது போல், ஆசிரியப்