பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கற்பிப்போர், ஆசிரியப் பயிற்சிக் கழகத்திலோ பல்கலைக் கழகத்திலோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்பது விதி. செகண்டரி பயிற்சிப் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு தேறியவர்கள் சேரலாம். அவர்கள் நான்காண்டு படிக்க வேண்டும். பத்தாவதில் தேர்ச்சி பெற்றவர்களும் சேர்க் கப்படுவார்கள். அத்தகையோரின் பயிற்சிக் காலம் ஈராண்டுகள் ஆகும். செகண்டரிப் பயிற்சிப் பள்ளிகளில் பயில்வோர், பொது உயர் பள்ளிக் கல்வியும் கற்பிக்கும் முறைக் கல்வியும் பெற்று, தொடக்கப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் ஆவார்கள். ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளில் படிக்கும் எல்லோர்க் கும் பயிற்சிக் காலத்தில் உதவிப் பணம் உண்டு. பயிற்சி யும் பிற வசதிகளும் இலவசம். தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் எல்லாப் பாடங்களே யும் கற்பிக்க வேண்டியிருப்பதால், இந்நிலைப் பயிற்சிப் பள்ளிகளில், எப்பாடத்திலும் சிறப்புப் பயிற்சி அளிப்ப தில்லை. இசை, உடற் பயிற்சி, படம் போடுதல் எல்லோர்க் கும் கட்டாயம். இலக்கியப் பாடத்தில் சிறுவர் இலக்கி யத்தைக் கற்றலும் சேர்ந்துள்ளது. பயிற்சியின் முடிவில், எல்லோரும் அரசின் தேர்வு எழுத வேண்டும். அதில், இரஷ்ஷிய மொழி நீங்கலான, பிற எல்லாத் தேர்வுகளும் வாய்மொழியாகவே நடக்கும். ஆசிரியப் பயிற்சிக் கழகங்கள், பல்கலைக் கழகக் கல் விக்கு ஒப்பான பயிற்சியைக் கொடுப்பவை. பல்கலைக் கழகங்களுக்குச் சமமான மதிப்பு இவற்றிற்கும் உண்டு. தொழிற் பயிற்சி பெருமலே எவரும் ஆசிரியராக இருக்க லாம் என்று கொள்கை அளவிலோ, நடைமுறையிலோ சோவியத் நாடு ஒப்புக் கொள்வதில்லை. பயிற்சிக் கழகங்கள் ஐந்தாம் வகுப்பிலிருந்து பத் தாம் வகுப்புவரை பாடஞ் சொல்லும் ஆசிரியர்களே ஆயத் தம் செய்கின்றன. பள்ளிகளுக்குத் தேவையான எல்லா இறப்புப் பாடங்களுக்கும் ஆசிரியர்களேப் பயிற்றுவிப்பது, 99