பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

போர் முனேக்குச் செல்லாத பொதுமக்களே, தேவை களைக் குறைத்துக் கொள்ளும் தியாகத்திற்கு ஆயத்தஞ் செய்யும். இப்படி பல்வேறு முயற்சிகளும் இணைவது, போரின் வெற்றிக்குத் தேவை.

நாம் திட்டமிடுகிற, எதிர்ப்பார்க்கிற, புதிய உலகத் திற்கும் திறன் மிக்க, இணைந்த, பல்வேறு முயற்சிகள் தேவை.

சமதர்ம ஆட்சியில் எல்லார்க்கும் எல்லா கியாயமான தேவைகளும் கிறைவேற வேண்டும். எல்லோருக்கும் பள்ளியிறுதி வரை படிக்க, இன்னும் பல இலட்சம் ஆசிரியர்கள் தேவை. எல்லாச் சிற்றுார்களுக்கும் கல்ல சாலை வேண்டும். இதற்கு இன்றிலும் அதிகமான பொறியியலார் தேவை. எல்லாக் கோடிகளுக்கும் உடனுக் குடன் மருத்துவ வசதி எட்ட வேண்டும். இலவச மாகவும் எட்ட வேண்டும். இதற்கும். மேலும் பல இலட்சம் மருத்துவ மேதைகள் தேவை. பையைப் பார்க் காமல் கையைப் பார்க்கும் மருத்துவர்கள் தேவை.

புதிய சமுதாயத்திற்குத் தொண்டாற்றப் போகும் பல்துறை வல்லுனர்கள், சிறந்த திறமையுடையவர் களாக மட்டும் இருத்தல் போதாது. மேசை நாற்காலி யைப் போன்று, பிழையேதும் அறியாத நாணயத்தோடு இருத்தல் மட்டும் போதாது. மக்களோடு மக்களாக கடந்து, பிறிதினுேய் தன்ளுேய் போல் நோக்கி கடக்கும் கல்லுணர்ச்சியுடையவர்களாக இருக்க வேண்டும்.

அத்தகைய சமதர்மத் தொண்டர்களே ஏராளமாகப் பெறுவது அரிது. சமதர்ம உணர்ச்சி உள்ள விரல் விட்டு எண்ணி விடக்கூடிய இளைஞர்களையும் - கன்ருக ஆயத்தஞ் செய்வதற்குப் பதில், அவர்களே, மாணவப் பருவத்தி