பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

அப் பழங்கதையை விட்டு விட்டு, விடுதலை பெற்ற இந்தியாவின் வரலாற்றிற்கு வருவோம்.

சமதர்ம சோவியத் ஒன்றியம், உலக அரங்கில், இந்தி யாவின் பக்கமே, கின்றிருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்தியாவின் சார்பில் குரல் எழுப்பியிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் அவையில், காஷ்மீர் சிக்கல் கிளப்பப்பட்ட போதும், சீனத் தாக்குதல் கடந்த போதும், ஆறு ஆண்டு களுக்கு முன்பு, பாகிஸ்தான் படையெடுத்த போதும் இந்தியாவிற்குத் துணையாக நின்றது சோவியத் நாடு. தேவைப்பட்ட போதெல்லாம், நமக்கு உதவியாக, தனது ரத்து உரிமையை, பந்தோபஸ்து சபையில் பயன்படுத் தியது சோவியத் நாடு. உலக அரங்குகளில் துணேவனுக கின்று, உதவியதோடு கின்றுவிடவில்லை. இந்தியா வளர, தொழில் வளம் பெற, வலிமை பெற, தொடர்ந்து, உதவி வந்துள்ளது. சோவியத் நிபுணர்கள், பல தொழிற் கூடங்களே இந்தியாவில் அமைத்துத் தந்துள்ளார்கள். சோவியத் நிதியும் அவற்றிற்குப் பயன்பட்டுள்ளது. பிலாய், பொகாரோ உருக்காலைகள் அந்த உதவியின் விளைவுகள். ராஞ்சியிலுள்ள, கன மின் கருவிகள் தொழிற்சாலை, சோவியத் உதவியால் உருவானது.

பறங்கி மலைக்கு அப்பால், நந்தம் பாக்கத்தில் இயங்கும், அறுவை மருத்துவக் கருவிகள் தொழிற் சாலையும் சோவியத் உதவிக்குச் சாட்சி. நெய்வேலி மட்டு மென்ன? சோவியத் உதவியை நினைவுபடுத்திக் கொண்டே ஒளிவிடுகிறது. பெரும் ஆலைகளை நிறுவிவிட்டு, அவற்றை இயக்க, சோவியத் நிபுணர்களின் தயவிலேயே, கால மெல்லாம் கிடந்து உழலச் செய்து விட்டார்களா? இல்லை. கம்மவர்களுக்கு நுட்பத் தொழிற் பயிற்சியைக் கொடுத் கனர். இங்கும் வந்து, தொழிற்சாலைகளிலிருந்து கொண்டு கற்றுக் கொடுத்தனர். அ வர் க ள் காட்டிற்கும்