பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

அடிப்படையில்தான், அண்மையில், இந்தியாவை, பாகிஸ்தான் தாக்கியபோது சோவியத் அரசு விரைந்து வந்து, நம் பாதுகாப்பு நடவடிக்க்ைகளுக்கு பலவகையிலும் 'பக்கபலமாக கின்றது. அந்த பக்கபலம், நமக்குப் பேருதவி யாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே. உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு இக்குறளுக்கு நல்ல எடுத்துக் காட்டாக விளங்கியது சோவியத் அரசு.

கம்மோடு நீண்ட காலத்திற்கு உடன்படிக்கை செய்து கொண்ட சோவியத் மக்கள் யார்? முன்னறியாப் புது உறவா? தெரியாதவர்களோடு, ஆனது ஆகட்டுமென்ற அசட்டுத் துணிச்சலில் கண்ணே மூடிக்கொண்டு ஒப்பந்தம் செய்துகொண்டோமா? இல்லை. இல்லை.

சோவியத் நாடு, ஏற்கனவே நமக்கு நேச நாடு. அங் நாட்டு மக்கள் புரட்சி செய்து ஜார் ஆட்சியைக் கவிழ்த்த போது அம்மாபெரும் நிகழ்ச்சியின் ஒலி இங்கேயும் எதிரொலித்தது.

நம் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் பாடிய பாட்டு இதோ:

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு

மேன்மையுறக்குடிமை நீதி கடியொன்றி லெழுந்தது.பார் குடியரசென்று

உலகறியக் கூறி விட்டார் அடிமைக்குத் தளையில்லை ; யாருமிப்போது

அடிமையில்லை அறிக என்ருர், இடிபட்ட சுவர்போலக் கலிவிழுந்தான்,

கிருதயுகம் எழுக மாதோ ! m அதே போல், நம் விடுதலைப் போராட்டத்தில், அங் நாட்டு அறிஞர்கள் அக்கறை கொண்டிருந்தார்கள்: