பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

பலே நாற்றுக்கு 98.6 விழுக்காடு தோச்சி. இந்தி: மாணவ மாணவிகள் எவ்வளவு அதிகமாகத் தேறியுள் ளார்கள் என்று அறிந்து பூரித்தோம். ஆயினும் ஆய்வாளர் பழக்கம் போகவில்லை.

நூற்றுக்கு 1.4 பேர் தவறி விட்டார்களே. அதற்குரிய காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமோ என்று கேட்டோம்.

தெரிந்து கொள்ளலாம்; உங்கள் நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கும் மாஸ்கோ நகரின் கட்ப வெப்ப நிலைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. வெப்பப் பகுதி யிலிருந்து குளிர் - கடுங்குளிர் பகுதிக்கு வந்ததும் சிலராவது, கோய்வாய்ப் பட்டு விடுகிருர்கள். அது இரண்டொருவரது தேர்வை பாதித்து விடுகிறது" என்று விளக்கத்தைப் பெற்ருேம். - ---

நம் நாட்டில் பரீட்சை எழுதுபவர்களில் பாதி பேர் வெற்றி பெறுவதே அற்புதம். அதற்குமேல், எப்போ தாவது. வெற்றி பெற்றுவிட்டால், ஐயக் கண்ளுேடு, பார்ப்போம். கேள்விகள் வெளியாகிவிட்டனவோ என்று அவதூறு பறக்கும். அப்படிப்பட்ட சூழ் கிலேக்கு பழக்கப் பட்டு விட்ட எனக்கு, கம் மாணவ மாணவிகள் மாஸ்கோவில் பெற்ற பெரும் வெற்றி, மகிழ்ச்சியூட்டி லுைம் வியப்பையும் ஊட்டிற்று, வியப்பை வெளிப் படுத்தினேன். நல்லதாகப் போயிற்று. மேலும் விளக்கங் கிடைத்தது. -

"பட்டியலைக் கவனமாகப் பாருங்கள். எந்த காட்ட வர்கள் தேர்ச்சியும் நூற்றுக்கு தொண்ணுாறுக்குக் கீழே இருக்காது. தேறுமளவிற்கு எல்லோரிடமும் வேல் வாங்கு கிருேம்" என்று சொல்லி முடிப்பதற்குள், கெருப்பில் வீழ்ந்த மிளகாய் வற்றல் போல் வெடித்தேன்.