பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இல்லாமற் போய்விடுகிறது. போட்டிக்கு - உள்ளது. சிறப்பதற்குத் தூண்டுகோல் இல்லாமையில்ை, அச் சமுதாயங்களில், உலகத்தின் உள்ளத்தைக் கவரும் இலக்கியங்கள் உருவாகும் வாய்ப்புக்கள் அற்றுப் போகின்றன.

இலக்கியப் பொருட்காட்சியின் முன் உள்ள பூங்காவில்' நான் சில நிமிடங்கள் சுற்றி வந்தபோது காலம் இரவு ஒன்பது மணியை நெருங்கிற்று. எங்களைத் தவிர யாரும் அங்கே - துறலைப் பொருட்படுத்தாது இருப்பார்க ளென்று எதிர்பார்க்கவில்லை. ஆனல் கண்டதென்ன? ஓர் இளம் ஆணும் பெண்ணும், ஏதோ உரையாடிக் கொண்டு, உலாவிக் கொண்டிருந்தனர். நம் படக்காட்சி காதலர்களாகத் தோற்றமளிக்கவில்லை.

கருத்தாளர்களையும் எழுத்தாளர்களேயும் கண் டோம். இக்கால இளைஞர்களையும் சிறுவர்களையும் காண லாமே, எங்களோடு வாருங்கள். விளையாட்டரங்கம் வெகு தாரத்தில் இல்லை" என்று சொல்லிக் கொண்டே, எங்களை பூங்காவிலிருந்து வெளியே அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

கார் ஏறி, ஸ்டேடியத்திற்குச் சென்ருேம். ஏழெட்டு கிமிடங்களில் அங்கு போய்ச் சேர்ந்தோம். உள்ளே, சென்ருேம். கண்டோம். என்ன கண்டோம் ? விளையாட் டைக் கண்டோம். என்ன விளையாட்டு ? கால்பந்து விளையாட்டு. ஆடிக் கொண்டிருந்தவர்கள் யார்? சிறுவர்கள்: வாலிபர்கள் அல்லர். டாஷ்கண்ட் உயர் நிலைப் பள்ளி மாணவர்களின் குழுக்கள் இரண்டு, போட்டி யிட்டு, கால் பந்தாட்டம் ஆடிக் கொண்டிருந்தன. ஆம்: சிறு துாறலைப் பாராது காட்டமாக ஆடிக் கொண்டிருந் தார்கள், பதின்ைகு பதினேந்து வயது தம்பிகள். இருப் டிலா ஆடினர்கள்? இல்லை, விளேயாட்டு அரங்கம்