பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

விமான கிலேயத்தில் இல்லாமல் போனல்?" என்று: இழுத்தேன்.

"அங்கிலேயில் என்ன செய்வதென்று டாஷ்கண்டில் கற்றுக் கொண்டோமே! இனி கவலையேன்? எல்லாம் சரியாக இருக்கும்' என்று தெம்பூட்டினர்கள் நண்பர்கள். 'நாம் மாஸ்கோ போய்ச் சேரும் போதாவது பெரும் பனி பெய்யாமல் இருக்க வேண்டுமே இது என் விருப்பம். இதைக் கேட்ட கண்பர்கள், 'அதுவும் நம் கையில் இல்லை. ஆகவே அதைப் பற்றியும் கவலைப்படுவதில் பயன் என்ன? நல்லபடியே இருக்குமென்ற கம்பிக்கையோடு பயனஞ் செய்வோம்' என்ருர்கள்.

விமானம் முப்பத்தோராயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. வேகம் ஐந் நூற்று ஐம்பது மைல்கள் என்ருர்கள். கிலோ மீட்டரில் அறிவிக்கவில்லை.

அதற்குமேல் சிந்தனை பருவகிலே பற்றி உழலவில்லை. ஆயினும் சிந்தையை அடக்கி சும்மா இருக்க முடியவில்லை. சோவியத் ஒன்றியத்தைப் பற்றியும் இரஷ்யக் குடியரசு பற்றியும் சிந்தனே திரும்பிற்று.

"மாஸ்கோவிற்குச் செல்ல எத்தனை மணி நேரம் பிடிக்கும்.'

"விமானப் பயணம் ஐந்து மணி நேரம் ஆகும்.' "மாஸ்கோ சோவியத் ஒன்றியத்தின் தலைநகர மல்லவா?'

'ஆம். சோவியத் ஒன்றியத்தின் தலைநகரமாயிருப்ப தோடு, இரஷ்யக் குடியரசின் தலைநகரமாகவும் இருக் கிறது."

"சாதாரணப் பேச்சு வழக்கில் இரஷ்யா என்பது.

தானே சோவியத் ஒன்றியம்?"