பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87.

ஏதோ சில இடங்களில் எப்போதோ சில வேளை ും, தரர் நிறுத்த இடமில்லாது தவிப்பவர்களைக் கண்டேன்.

ஆறு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மாஸ்கோ சென்ற் போது, இத்தகைய தவிப்பு சற்று மிகுந்திருப் பதைக் கண்டேன். காரணம்? தனியார் வைத்துள்ள கார் களின் எண்ணிக்கை வளர்ந்து விட்டது. இம் முறை பார்த்த போது கார்களின் எண்ணிக்கை மேலும் பெருகி யுள்ளது தெரிந்தது. பல வேளை பல இடங்களில் கார்களே நிறுத்த இடம் தேட வேண்டியதாயிற்று. அதாவது கார் வாங்கிக் கொள்ளும் கிதி நிலையில் உள்ள சோவியத் ம்க்கள், அதிகமாகியுள்ளார்கள் என்பதே பொருள் .

சோவியத் நாட்டில் கார் இறக்குமதி அருமை. அங் காட்டிலேயே கான்கைந்து வகை கார்களும், பார வண்டி களும், பேருந்து வண்டிகளும் உற்பத்திச் செய்கிருர்கள். அவை, 'லொட லொட' என்று ஆடுபவையல்ல ; அழுத்த மானவை; உறுதியானவை; நன்ருக வேலை செய்பவை: விரைந்தோடும் ஆற்றல் உடையவை.

தனி நபர் கார்கள் மட்டுமா கம்பகமானவை பார வண்டிகளும் பேருந்து வண்டிகளும் அப்படிப்பட்ட வையே. வழியில் கின்று கிடக்கும் பாரவண்டியோ பேருந்தோ என் கண்ணில் தென்படவில்லையே. அவை சிறிய உருவினவல்லவே. கார் விஷயத்தில், இந்தியர்களை விட, சோவியத் மக்கள் நற்பேறு பெற்றவர்கள்

என்பதில் ஐயமில்லை.

மாஸ்கோ பற்றியும் சோவியத் மக்களைப் பற்றியும் இப்படிப்பட்ட பல செய்திகளைத் தெரிந்து கொண்டோம் |மாஸ்கோவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில்.