பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

மென்பது தூதுக் குழுவின் முடிவு. முடிவை ஏற்றுக் கொண்டேன்.

"நான் சோவியத் நாட்டிற்குப் புதியவன் அல்லன். முன்னர் இருமுறை இங்கு வந்து, சோவியத் நாட்டைப் பற்றியும் கல்வி முறை பற்றியும் எவ்வளவோ தெரிந்து கொண்டு போயிருக்கிறேன்.

"சோவியத் மக்கள் கட்புக்கும் விருந்தோம்பலுக்கும் சிறந்தவர்கள் என்பதை இருமுறை கேரில் உணரும் வாய்ப்பைப் பெற்றவன். எனவே, மீண்டும் நண்பர் களிடையே வந்து, சில நாட்கள் தங்கிப் போக வாய்ப்பு கிடைத்ததைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.

'உலகத்தில், முதன் முதலாக, சமதர்ம, பாட்டாளி களின் ஆட்சியை அமைத்த இந் நாடு, கல்விக்குச் சொர்க்க பூமி. இங்காட்டில் எல்லா வயதினருக்கும் எல்லா தொழிலாளிகளுக்கும் வகை வகையான கல்வி வாய்ப்புகள் உள்ளன. இந்நாட்டுப் பாட்டாளிகளுக்கு, கல்வியின் பால் ஏற்பட்டிருக்கும் தீராத் தாகத்தையும் அவர்கள் வாய்ப் புகளே நல்லவண்ணம் பயன்படுத்திக் கொள்வதையும் கண்டு புளகாங்கிதம் அடைந்துள்ளேன். மாணவர்கள் மாணவர்களாகவே இருந்து, படித்து, படித்து மேலும் படித்து, சமதர்ம ஆட்சிக்குத் தொண்டாற்ற ஆயத்தஞ் செய்து கொள்வதே, இளைஞர்கள் ஆற்றும் காட்டுத் தொண்டு, புரட்சித் தொண்டு என்று நெறிப்படுத்தியவர் உங்கள் சோவியத் நாட்டின் தந்தை மாமேதை லெனின் அவர்களே. கல்வியாளன் என்ற முறையில், இதற்காக நான், லெனின் அவர்களிடம் தனியாகப் பெருமதிப்பு கொண்டுள்ளேன்.

"சோவியத் ஆட்சி, பிறவகையான பொருளாதார சமூக அமைப்புள்ள நாடுகளோடும் மக்களோடும்