பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

களில் பங்கு கொண்டன. புலியோ கரடியோ வரவில்லை. சிங்கமோ, யானையோ, தலை நீட்டவில்லை. சில் மிருகங்கள் விளையாடின. மக்களை மகிழ்வித்தன.

சர்க்கஸ் வித்தைக்காரர்கள், மிக கெட்டிக்காரர்கள். மயிர்கூச்செரியும் விளையாட்டுகளேச்செய்து காட்டினர்கள். ஒவ்வொரு விளையாட்டும் முடிந்ததும் வித்தைக்காரர்கள் ஒடி விடுவார்கள். ரசிகப் பெருமக்கள், கை தட்டி ஒலி எழுப்புவார்கள். அப்போது, வித்தைக்காரர்கள், அரங்கத் திற்கு திரும்பி வர வேண்டும்; வந்து, மக்களுக்கு வணக்கத் தைத் தெரிவித்து விட்டு, ஒடிப் போவார்கள். சில வித்தை களைப் பார்த்தபோது, இருமுறை மூன்று முறைகூட, கைதட்டிப் பாராட்டினேம். அத்தனை முறையும், வித்தைக்காரர்கள் எங்கள் முன் தோன்றி, எங்கள் பாராட்டை, ஏற்றுக் கொண்டார்கள்.

நம் நாட்டில், யாரோ ஒரு முதலாளி, துணிந்து, முதல் போட்டு, ஆண்களையும் பெண்களையும், சிறு வயதிலேயே தேடிப் பிடித்து, சர்க்கஸில் சேர்த்து, பயிற்சி கொடுத்து: தன் காலட்சேபத்தை, நடத்துகிருர். ஒவ்வொரு நகரில் கூடாரம் அடிக்கும்போதும் அங்குள்ள நகராட்சித்தலைவர், ஆணையர், பெரிய புள்ளிகள் ஆகியவர்களுக்கு, இலவச நுழைவுச் சீட்டு. சில வேளை குடும்பம் முழுவதற்குமே இலவச நுழைவுச் சீட்டு-கொடுத்து சரி கட்டிக் கொண் டால்தான், பிழைப்பு நடக்கும். சோவியத் நாட்டில். அப்படியல்ல. சர்க்கஸ் முதலாளி, மக்களே; அவர்கள் சார்பில், சோவியத் அரசே, சர்க்கஸ்களை நடத்துகிறது. எனவே சர்க்கஸ்களே கடத்துவோர், யாரையும் சரிகட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதற்கான சிந்தனே தேவை யில்லை. அவர் அவருக்குரிய வேலையை அவரவர் சீராகவும் சிறப்பாகவும் செய்வதிலேயே, சிங்தை முழுவதும் வேலே