பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

102

'ஆளந்த பவனத்தையும் சீல் வைக்க எண்ணியிருக்கிறது சர்க்கார் .' என்றொரு செய்தி வந்தது.

கேட்டார் ஜவஹர். கலங்கினார்; நகச்சுற்றின் மேல் உலக்கை விழுந்தது போல் துடித்தார்.

'ஆனந்த பவனம் ! நான் துள்ளித் திரிந்து விளையாடிய ஆனந்த பவளம் ! எனது தந்தை இருந்து வாழ்ந்த ஆனந்த பவனம் ! அதை மூடி சீல் வைக்கப் போகிறதா அரசாங்கம் ?

"எவ்வளவு நாற்காலிகன் ! எவ்வளவு மேஜைகள் ! எவ்வளவு சோபாக்கள்! அன்புடன் அளித்த பரிசுப் பொருட்கள் எவ்வளவு ஆசையுடன் சேகரித்த அலங்கார பொருட்கள் தான் எத்தனை : இவற்றையெல்லாம் எவ்வளவு அருமையாகப் போற்றி வந்தோம் பெருமையுடன் பேணி வந்தோம் ! அருமை பெருமையுடன் நாங்கள் போற்றிய பொருள்களை எல்லாம் ஏலம் போடப் போகிறதா? எனது அன்னை அந்தோ! அவர் எங்கு செல்வார்? எவருடைய வீட்டில் போய் வசிப்பார் : அரசி போல் வீற்றிருந்த அவர் ஆண்டி போல் எங்கு சென்று ஒண்டுவார்?.'

இவ்வாறு எண்ணி எண்ணி மனம் நொந்தார், வெந்தார்!

‘சக்கரவர்த்தி என்றே- மேலாம் தன்மை படைத்திருந்தோம்; பொக்கென ஓர் கணத்தே எல்லாம் போகத் தொலைத்து விட்டாய்."

(பாரதியாள் பாஞ்சாலி சபதம்)

என்று இடித்துக் கூறினான் வீமன். யாரைப் பார்த்து? தரும புத்திரைப் பார்த்து. வீமனைப் போல் இடித்துக் கூறியது ஜவஹரின் உள்ளம்.