உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

101

அடக்கு முறைகளைக் கண்டித்து எழுதக்கூடாது இப்படியாக ஏராளமான பட்டியல்களை மேலும் மேலும் வெளியிட்டுக் கொண்டே இருந்தார் வைசிராய்.

ஆனால் பாரத மக்கள் என்ன செய்தார்கள் ? விலிங்க்டன் பூச்சாண்டி கண்டு அஞ்சினார்களா? இல்லை. போரிலே குதித்தார்கள். தீவிரமாக இறங்கினார்கள்.

அலகாபாத்திலே ஜவஹரின் ச கே த ரி மார் விஜயலட்சுமியும், கிருஷ்ணாவும் போரிலே பங்கு கொண்டனர், சிறை சென்றனர். விஜயலட்சுமி கணவர் ஆர்.எஸ் பண்டிட்டும் சிறை சென்றார்.

பெண்கள்! கல்லூரி மாணவிகள்! மாணவர்கள்! ஆயிரக்கணக்கில் சிறை சென்றார்கள்.

மக்கள் தங்களுக்குத் தோன்றிய வகையில் எல்லாம் சட்டம் மீறினர். ஆக, நான்கே மாதங்களில் - அதாவது ஏப்ரல் இறுதிக்குள் என்பதாயிரம் பேர் சிறைச்சாலைகளை நிரப்பினார்கள்.

முப்பத்தி ஆறாம் அத்தியாயம் எல்லையே கிடையாதா?

சிறைக்குள்ளே இருந்த வண்ணம் இந்தச் செய்திகளை

எல்லாம் அறிந்தார் ஜவஹர். மக்களின் எழுச்சி கேட்டார்; மனம் மகிழ்ந்தார்.

சுயராஜ்ய பவனம் சீல் வைக்கப்பட்ட செய்தி அறிந்தார்; சீர்னார். காங்கிரஸ் கொடி கீழே இறக்கபட்ட செய்தி கேட்டார். அராஜகத்திற்கு எல்லையே கிடையாதா?’ என்று ரத்தக் கண்ணிர் வடித்தார்,