பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

104

ரயில்வே கம்பெனி ஒன்றில் சில பங்குகள் இருந்தன. அவற்றை ஜப்தி செய்தார்கள். ஏலம் போட்டார்கள். விலிங்க்டன் ஏலம் போடுவதில் பேர் பெற்றார்.”

முப்பத்தி ஏழாம் அத்தியாயம் இயற்கை தந்த இன்பம்

ஜவஹரின் உடல் நிலை செட்டது. தினமும் மாலை வேளைகளில் காய்ச்சல் வந்தது. எனவே அவரை வேறு இடத்திற்குக் கொண்டு போக எண்ணினார்கள் அதிகாரிகள். பெரில்லி சிறைக்குக் கொண்டு போனார்கள்

நைனி சிறையை விட்டுச் செல்வது சிறிது கஷ்டமாகத் தான் இருந்தது ஜவஹருக்கு. ஏன், பழகிய முகங்கள். க ண் ைன க் கவரும் கிளிகள்! அழகான கிளிகள் ஆனந்தமாகப் பறந்துவரும். பக்கத்திலே உள்ள தோப்பில் இருந்து ஓடிவரும். அவற்றைக் காண்பார் ஜவஹர் ஆனந்தம் கொள்வார். இத்தகைய சூழ்நிலையை விட்டுச் செல்வது என்றால் சிறிது சிரமம் தானே !

பெரில்லி சிறைக்குள்ளே குரங்குகள் ஏராளமாக வரும், அவற்றைக் கண்டு மகிழ்வார் ஜவஹர்.

குட்டிக் குரங்கு ஒன்று ஒரு முறை கைதிகளிடம் சிக்கிக் கொண்டது. கயிறு கொண்டு அதைக் கட்டி விட்டார்கள் கைதிகள். குட்டிக்குரங்கு கூச்சல் போட்டது. கேட்டது ஒரு பெரிய குரங்கு சீறிக் கொண்டு வந்தது. தாவிக் குதிததது. கூட்டமாக நின்ற கைதிகள் பயத்து ஓடினார்கள். குட்டியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டது பெரிய குரங்கு.