பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

105

பெரிய குரங்கின் வீரச் செயல் கண்டார் ஜவஹர்; மிக மகிழ்ந்தார். வீரச் செயல் புரிவதிலே ஆர்வமும் ஆனந்தமும் கொள்ளும் ஜவஹர் குரங்கின் வீரம் கண்டு மகிழ்ந்தது இயற்கையே.

கோடை காலம். கடுமையான வெயில். சிறையிலே உஷ்ணம் தாங்க முடியவில்லை. என்ன செய்வது? மிகவும் துன்புற்றார் ஜவஹர். நான்கு மாத காலம் அவதியுற்றார். அதன் பிறகு? மற்ருெரு சிறைக்கு மாற்றியது அரசாங்கம் எங்கே? டேராடூன் சிறைக்கு.

டேராடூன் சென்ற பிறகு ஜவஹரின் உடல் நிலை குணமாயிற்று. மனத்திலே அமைதி ஏற்பட்டது இயற்கையின் வனப்பிலே ஈடுபட்டார். சிறை வாழ்வை மறந்தார்; மன ஆறுதல் பெற்றார்.

விஜயலட்சுமியின் கணவர் ஆர். எஸ். பண்டிட் அலகாபாத் சிறையில் இருந்தார். அவரைக் காணச் சென்றார் ஜவஹரின் தாயார். கமலாவும இந்திராவும் உடன் சென்றனர்.

சிறை வார்டன் என்ன செய்தான்? கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்டான். அவர்களை அவமதித்தான். மூவரும் வீடு திரும்பினர்.

அரசாங்கம் வார்டனின் செயலை கண்டிக்க வில்லை; மெளனம் சாதித்து அவனுக்கு சாதகமாக இருந்தது.

இச் செய்தி அறிந்தார் டேராடூன் சிறையிலிருந்த

ஜவஹர். கோபங் கொண்டார்.

'என்னை எவரும் வந்து காணவேண்டாம் காணவும் மாட்டேன்’ என்று கூறினார்.

13

நான்