பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

106

"அன்புடன் என்னைக் காண வந்து இந்த சிறைக் கோட்டான்களிடம் அவமானப்பட வேண்டாம். அதை என்னால் சகிக்கமுடியாது' என்றார்.

ஒரு மாதமா ? இரண்டு மாதமா ? ஏழு மாத காலம் ! உறவினர் எவரையும் பாராதிருந்த இந்த ஏழு மாத காலமும் ரொம்பக் கஷ்டப்பட்டார் ஜவஹர்.

'அன்பு முகங்களைக் காண முடியவில்லையே என்று ஏங்குவார், வருந்துவார். அலகாபாத் சிறையிலே பெற்ற அவமானத்தை எ ன ணு வ ச ர், மீண்டும் மனத்தை

திடப்படுத்திக்கொள்வார்.

சகோதரி விஜயலட்சுமியிடமிருந்து ஒரு கடிதம் வரும் சகோதரி கிருஷ்ணாவிடமிருந்து மற்றொரு கடிதம் வரும்.

கடிதங்களைக் கண்டவுடனே மகிழ்வார் ஜவஹர்; கடிதத்தைக் கையில் எடுப்பார்; திருப்பித் திருப்பிப் பார்ப்பார்; ஆனந்தம் கொள்வார், மீண்டும் வைத்து விடுவார். கண்ணெதிரே சகோதரியைக் காண்பவர் போல் களிப்பெய்துவார். சீக்கிரத்தில் கவரை உடைக்க மாட்டார், கடிதத்தைப் படிக்கமாட்டார்.

ஏன் ? கடிதத்தில் என்ன செய்தி இருக்குமோ ? நல்ல சேதியோ அல்லது துன்பச் சேதியோ ?

"நல்ல செய்தி இருந்தால் மகிழ்ச்சி தான். துன்பச் சேதி இருந்தால்.........இந்த மகிழ்ச்சி போய் விடுமே !

' எனவே அவசரப்பட்டு எதற்காகக் கடிதத்தைப் பிரித்துப் பார்க்க வேண்டும் ?’’ இதுவே ஜவஹரின் எண்ணம்.

င္ငံႏိုင္ငံ