பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

109

இடம் கொடுத்தேன் ; ஏற்றி வைத்தேன் ; போற்றி வந்தேன். பொக்கென ஒரு கணத்திலே எல்லாம் பொடிப் பொடியாகி விட்டனவே! எல்லாம் பாழ்! எல்லாம் பாழ் ! சூனியமாக அல்லவோ காட்சி தருகிறது.'

“ அவருடைய உருவம் என் கண்முன் தோன்றுகிறதே! தோன்றித் தோன்றி மறைகிறதே ! மீண்டும் மீண்டும் தோன்றுகிறதே ! மறுபடியும் அவரை நான் சந்திப்பேனா ? பேசுவேனா? சிறையை விட்டு வெளி வந்ததும் எவரைப் போய் காண்டேன் ? எவரிடம் மனந்திறந்து பேசுவேன் ? எவரிடம் யோசனை கேட்பேன் ? எனது ஐயப்பாடுகளை எவரிடம் சொல்வேன் ? எனது துயரங்களை எவரிடம் சொல்லி ஆற்றுவேன் ? நமக்கு ஒளி தந்த தலைவர் போய் விட்டால் என்ன செய்வோம் ?’’

இவ்வாறு வருத்தினார் ஜவஹர். புலம்பினார். சிந்தை கலங்கினார்.

ஐந்து நாள் வரை மகாத்மாவின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. எல்லோரும் கூடிக் கூடிப் பேசினார்கள். ஐந்தாவது நாள் ஒர் ஒப்பந்தம் ஏற்பட்டது. பூனா ஒப்பந்தம் என்று அதற்குப் பெயர். அந்த ஒப்பந்தத்தை ராம்சே மாக்டனால்டு ஏற்றார்.

காந்தி தமது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் எலுமிச்சம் பழ ரசம் அருந்தினார்.

இந்திய மக்கள் கவலை நீங்கப் பெற்றார்கள். பெருமூச்சு விட்டார்கள்.

ဒွိႏိုင္ငံ