பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

முப்பத்தி ஒன்பதாம் அத்தியாயம் நாயககுடடியும் நேருவும்

டேராடூன் சிறையில் தனிமையிலே இருந்தார் ஜவகர். தனிமை மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. இம்முறை சிறை வாசம் அவரை வாட்டியது. பெரிதும் வாட்டியது, பேச்சுத் துனேக்கு எவருமே இல்லை. எப்போதாவது ஒரு முறை வார்டன் வருவான். இரண்டொரு நிமிடம் பேசிக் கொண்டிருப்பான். போய் விடுவான். அதன் பிறகு? தனிமை, தனிமை, தனிமை 1.

வானத்தைக் காண்டார் அதிலே தவழ்ந்து செல்லும் மேகக்கூட்டங்களைக் காண்பார். மரங்கள் மீது கருத்தைச் செலுத்துவார். அவற்றில் அமர்ந்திருக்கும் பறவைகளை நோக்குவார்.

பறவைகள் சுதந்திசமாக கூட்டங் கூட்டமாக பறந்து செல்லும் அழகை சிறையிலிருக்கும் நேரு பார்ப்பார். அவற்றின் பின்னே கண்கள் தாமே தொடரும். வெகு துரம் பறந்து செல்லும் வரை பார்த்த வண்ணம் இருப்பார். ஒரு நாளா? இரண்டு நாளா? பல மாதங்கள் இப்படியே காலம் கடந்தது.

தனிமை இன்பம் தந்ததா? இல்லை துன்பமே தந்து வாட்டி வதைத்தது.

இதற்கும் ஒரு மாற்று வந்தது. நாய் ஒன்று; கவனிப்பார் இன்றி இருந்தது. அதைப் பார்த்தார் ஜவஹர். பேணி வளர்த்தாள். குட்டி போட்டது அந்த நாய். மூன்று குட்டிகள் மூன்று குட்டி கலை 1:ம் எடுத்து வளர்த்தார்.

ஒரே ஒரு குட்டிக்கு உடம்பு சுகமில்லை. அதை நன்கு கவனித்தார் ஜவஹர். இரவு நேரங்களிலே பலமுறை எழுந்திருப்பார், அந்தக் குட்டி அருகே சென்று கவனிப்பார். குழந்தையைத் தாய் கவனிப்பது போல.