பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

120

மற்ருெரு நாள். இன்னொரு கனவு.

பலர் சூழ்ந்துகொண்டு அவரை அமுக்கிக் கொலை முயற்சி செய்வது போல் கனவு கண்டார்; கூச்சலிட்டார்.

கூச்சல் கேட்டார்கள் வார்டர்கள். ஓடிவந்தார்கள்; விசாரித்தார்கள்.

இவ்விதம் அடிக்கடி கனவு கண்டார் ஜவஹர்.

வைத்திய சிகிச்சைக்காக கல்கத்தா வந்திருந்தார் கமலா சிறைக்குச் சென்றார்; ஜவஹரைக் கண்டார்; பேசினார்.

கமலாவின் வருகை நேருவின் சோர்வைப் போக்கியது. சிறிது உற்சாகமாக இருந்தார் ஜவஹர்,

வெயில் காலம் வந்தது. சிறையிலே உஷ்ணம் தாங்க முடியவில்லை. மிகவும் அவதியுற்றார் நேரு.

மே மாதத்திலே ஒரு நாள்; காலையில் சிறை அதிகாரி வந்தார். ' புறப்படுங்கள் ” என்றார்.

' எங்கே?' என்று கேட்டார் ஜவஹர். ' வேறு சிறைக்கு” என்ற பதில் வந்தது.

மகிழ்ச்சியுற்றார் ஜவஹர் இந்த வெம்மை நரகம் அலிப்பூர் சிறையிலிருந்து மாறுகிறோம்" என்பது பற்றி மகிழ்ச்சி.

"எங்கு கொண்டு போகிறீர்கள்?" " டேராடுன்' என்ற பதில் வந்தது. மிக்க மகிழ்ச்சியுற்றார் நேரு. ஏன்? டேராடூன் மிகவும் குளிர்ந்த இடம். இயற்கைக் காட்சிகள் மலிந்த இடம். மனோரம்யமான இடம். மொத்தத்தில் ஜவஹருக்கு பிடித்தமான இடம்.