பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

நாற்பத்தி ஆறாம் அத்தியாயம் என்ன கூறுவது ? எப்படி கூறமுடியும் ?

பதினொரு நாள் விடுதலை பெற்று ஜவஹர் வந்த செய்தி எங்கும் பரவியது. ஜவஹரின் நண்பர் பலர் இச் செய்தி அறிந்தனர். ; ஓடோடி வந்தனர். ஜவஹரைக் கண்டனர் ; மகிழ்ந்தனர் ; பேசினர், பல்வேறு விஷயங்கள் பற்றிப் பேசினர். இடைக் காலத்திலே நிகழ்ந்த அரசியல் சம்பவங்கள் பலவற்றை அறிவித்தனர். அவை பற்றி அபிப்பிராயம் கூறுமாறு ஜவஹரைக் கேட்டனர். ஜவஹர் அபிப்பிராயம் கூறினாரா ? இல்லை. ஏன் ?

காங்கிரஸ் காரியக் கமிட்டி அங்கத்தினரை அவர் பார்க்க இயலவில்லை. அரசியல் விஷயங்கள் பற்றி அவர்களுடன் பே ச வி ல் ைல, முழு விபரங்களையும் அறியவில்லை. நாட்டு நடப்பு என்ன என்று அறியவில்லை

இப்படி இருக்கும்போது திடீரென்று அபிப்பிராயம் சொல்வது சரியாகாது.

அவரது சிறைவாசத்தின் போது நிகழ்ந்த செயல்கள் பல பற்றி மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்தார் அவர். அது பற்றி இதர தலைவர்களுடன் பேச வேண்டும். பேசாமல் திடீரென்று எதுவும் சொல்லிவிடக் கூடாது. அது மாத்திரமல்ல. சிறிது மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டிருக்கிறது சர்க்கார். நோய்வாய்ப்பட்டு அவதியுறும் கமலாவைக் காண அனுமதி அளித்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை அரசியலுக்கு பயன்படுத்த எண்ணவில்லை