பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

126

ஜவஹர். பெருந் தன்மையுடன் நடந்துகொள்ள விரும்பினார். எனவே அரசியல் சம்பந்தமாக எந்த விதமான அபிப்பிராயமும் கூறவில்லை, அறிக்கைகளும் வெளியிடவில்லை. ஆனால் ஒரு கடிதம் மட்டும் எழுதினார் காந்தி.

செய்தி கேட்டேன் சிறையிலே. என்ன செய்தி ? போரை நிறுத்திவிட்ட செய்தி. மிக வருந்தினேன். சில நாட்கள் சென்றன. தாங்கள் வெளியிட்ட அறிக்கையைக் கண்டேன்; திடுக்கிட்டேன். அதிர்ச்சியடைந்தேன்; என்றுமே அடையாத ஒர் அதிர்ச்சி. ஏன் ? போர் நிறுத்தத்துக்குத் தாங்கள் கூறிய காரணங்கள், அவை என்னை கலக்கின குலுக்கின; வாட்டின; வருத்தின. துக்கம் தொண்டையை, அடைத்தது. ஏதோ ஒன்று உடைந்துவிட்டது போல் எண்ணினேன், பல காலமாக பேணிப் போற்றி வந்த ஒன்று திடீரென்று வெட்டி எறியப்பட்டது போல உணர்ந்தேன் ; நம்மை இணைத்திருந்த பாசபந்தம் துண்டித்து வீசப்பட்டது போல துடித்தேன். தனிமையில் நிற்பது போல் தவித்தேன். தனிமை, தனிமை பாலைவனத்திடையே சிக்கித் தவிப்பது போன்ற தனிமை. தனிமை என்பது எனக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. சிறு வயது முதலே தொடர்ந்து வருவதாகும். இடையிலே அதன் சுமை சிறிது குறைந்திருந்தது. இப்போது மீண்டும் அதிகமாகிவிட்டது. இவற்றை யெல்லாம் ஒருவாறு சமாளித்துக் கொண்டேன் ; சிறிது தேறினேன். மீண்டும் மீண்டும் புதிய தாக்குதல்கள். பத்திரிகைகளையே பாராது இருந்து விட்டால் நல்லது என்று தோன்றியது ..... 3 *

இவ்வாறு எழுதினார் ஜவஹர். காங்கிரஸ் காரியக் கமிட்டித் தலைவர்களுக்கும் தமக்கும் உள்ள கருத்து வேற்றுமை பற்றியும் குறிப்பிட்டார். வேற்றுமை எது பற்றி சோஷலிலம் பற்றி.

சுயராஜ்ய பவனத்தின் ஒரு பகுதியை வாடகைக்கு விட எண்ணியது காங்கிரஸ். இதை அறிந்தார் ஜவஹர்