பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

134

'அப்படியானால் பாரிசுக்கும் லண்டனுக்கும் போய் வருகிறேன்' என்று கூறிவிட்டுப் புறப்பட்டார் ஜவஹர்.

1936 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலே காங்கிரஸ் மகாசபை கூடப்போகிறது. ராஷ்டிரபதி (தலைவர்) ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜவஹர். இச்செய்தி அவருக்கு அறிவிக்கப்பட்டது.

"இந்தியாவுக்குப் புற ப் ப ட் டு வருக ” என்று

வற்புறுத்தினார்கள் நண்பர்கள்

'மனைவி அருகில் இருப்பதா? அல்லது இந்தியா செல்வதா?”

இவ்வாறு யோசித்தார் ஜவஹர். மனைவி அருகில் இருக்க விரும்பினால் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். பதவி வேண்டுமானால் மனைவியை விட்டுச் செல்ல வேண்டும். என்ன செய்வது? எதைச் செய்வது ? இது தான் கேள்வி.

“ இந்தியாவுக்குப் புறப்படுங்கள். ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு மறுபடியும் என்னைக் காண வரலாம் ' என்றார் 安重参象}P。

சரி ' என்றார் ஜவஹர். பிப்ரவரி மாதம் 28-ந் தேதி விமானத்தில் புறப்பட்டு இந்தியா சேர்வது என்று முடிவு செய்யப்பட்டது. விமான டிக்கட்டும் வாங்கப்பட்டுவிட்டது.

ஜவஹரின் உள்ளத்திலே ஏதோ ஒரு வேதனை வாட்டிக் கொண்டிருந்தது.

புறப்படுவதற்கு இன்னும் நான்கே நாட்கள், டாக்டர்கள் ஜவஹரைத் தனியே அழைத்தனர்.

' உங்கள் பிரயாணத் தேதியைத் தள்ளிப் போடுங்கள். இன்னும் பத்து நாட்களுக்குப் பிறகு போகலாம் ' என்றனர் .