பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

14

காந்தியின் சத்தியாக்கிரக கொள்கையை ஏற்கவேயில்லை மிதவாதிகள் மாறாக எதிர்த்தார்கள். கண்டித்தார்கள். மிதவாதிகளில் ஒருவர் மோதிலால் நேரு, தந்தை எதிர்ப்புக் கட்சி ; இளைய நேரு சத்தியாக்கிரக சபாவின் ஆதரவு கட்சி. எனவே சூழ்நிலை எப்படியிருந்தது ?

மோதிலால் நேருவின் வீட்டிலே ஒரே ரகளை பூசல் , இடி முழக்கம் : புயல் கொந்தளிப்பு எல்லாம். இது மோதிலால் நேரு வீட்டில் மட்டுமா ? இல்லை, இல்லை. ஒவ்வொரு பாரத நாட்டு இளைஞன் வீட்டிலும் மோதியது ; பாய்ந்தது : எதிரொலித்தது,

மகாத்மாவின் புதிய சக்தி, இந்திய இளைஞன்

ஒவ்வொருவனையும் பிடித்துக் குலுக்கியது ; தடடி எழுப்பியது ; துள்ளி எழச் செய்தது.

' வா வெளியே ’’ என்று இளைஞர் கூட்டத்தையே வெளியே இழுத்தது மகாத்மாவின் குரல். ' அப்படியா ? போ வெளியே ' என்று விரட்டியது பெற்றோர் குரல்.

மோதிலால் நேருவும் பாசம் மிகுந்த ஒரு தந்தை தானே ! அங்கும் அதே சூறாவளிதான். ' சத்தியாக்கிரகமா செய்யப் போகிறாய் சத்தியாக்கிரகம் செய்கிறதாம், ஜெயிலுக்குப் போகிறதாம் ' என்று உறுமினார் மகனைப் பார்த்து.

என்ன பைத்தியக்காரத்தனம் இதனால் எல்லாம் வெள்ளைக்காரன் பயந்து பணிந்து விடுவானோ ?' என்று எள்ளி நகைத்தார் பெரிய நேரு, எதிரே நின்றார் இளைய நேரு.

"நான் சத்தியாக்கிரக சபாவில் சேரத்தான் போகிறேன்!!! என்றார் திட்டவட்டமாக,