பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

2}

"ஓர் உறுதி மொழி வேண்டும்' என்றார் போலீஸ் அதிகாரி.

என்ன உறுதி மொழி:

'ஆப்கன் தூது கோஷ்டியுடன் எவ்வித தொடர்பும் கொள்ள மாட்டேன் என்ற உறுதிமொழி.”

'அவசியம் வேண்டுமோ ?”

‘ஆம்; எழுதி கொடுக்க வேண்டும்.”

என்ன செய்வது? யோசித்தார் ஜவஹர். உறுதி மொழி எழுதிக் கொடுத்தால் முசோரியில் தங்கலாம். தாய் அருகில் இருக்கலாம். ஆனால் ..... உறுதி மொழி எழுதிக் கொடுப்பது ஜவஹரின் சுயமரியாதைக்குக் கேடு விளைவிப்பதாகும்; தன் மானத்தை இழப்பதாகும். தன் மானத்தை இழப்பதா? முடியாது, முடியாது, முடியவே முடியாது!

“எழுதிக் கொடுக்க முடியாது' என்றார் ஜவஹர்.

"அப்படியானால் தாங்கள் இந்த ஊரில் இருக்க முடியாது. 24 மணி நேரத்தில் முசோரியை விட்டு போய்விட வேண்டும். மீண்டும் வரக் கூடாது.”

இந்த உத்தரவை பிறப்பித்தார் ஜில்லா போலீஸ் சூப்பிரண்டு. போலீஸ் உத்தரவுக்கு அடங்கி ஊரை விட்டுப் போவதா? அல்லது உத்தரவை மீறுவதா?

இவ்வாறு யோசித்தார் ஜவஹர். அப்போது சட்டம் மீறும் திட்டம் அமுலுக்கு வரவில்லை. எனவே போலீஸ் அதிகாரியின் உத்தரவுப்படி நடக்க முடிவு செய்தார் ஜவஹர். முசோரியை விட்டு புறப்பட்டார்; அலகாபாத் சேர்ந்தார்.