பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

எட்டாம் அத்தியாயம் உறுதி மொழி தந்த நெஞ்சுறுதி

கோடை காலத்திலே மலை நகரங்களுக்குச் சென்று வசிப்பது வெள்ளையர் உண்டாக்கியதொரு பழக்கமாகும். அந்தக் காலத்திலே வெள்ளையர்களைப் போல் வாழ்வது தான் நாகரீகம் என்று கருதிர்ைகள் இந்தியப் பணக்காரர்கள். எனவே அவர்களும் மலைவாசங்களைத் தேடிச் செல்வது வழக்கமாக இருந்தது.

முசோரி என்பது முக்கியமானதொரு மலைநகரம். 1920ம் ஆண்டிலே மே மாதத்தில் ஜவஹரின் அன்னையாரும் மனைவியும் அந்த மலை நகருக்குச் சென்று வசித்தனர். காரணம் இவ்விருவரும் உடல் நலமின்றி இருந்தமையே.

சவாய் ஹோட்டல் என்பது ஒரு பெரிய ஹோட்டல். அதிலே தான் இவர்கள் தங்கியிருந்தார்கள். மனைவியையும் தாயையும் கவனிப்பதற்காகச் சென்றிருந்தார் ஜவஹர். ஒரு மாத காலம் அங்கே தங்கியிருந்தார்.

அதே ஹோட்டலில் ஆப்கானிய தூது கோஷ்டி ஒன்றும் தங்கியிருந்தது. இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துக் கொள்வதற்காக வந்திருந்தது அந்த தூது கோஷ்டி.

ஒரு நாள் முசோரி ஜில்லா போலீஸ் சூப்பிரண்டு வந்தார். ஜவஹரை கண்டு பேசினார். 'ஆப்கானிய தூது கோஷ்டியினர் உடன் எவ்விதத் தொடர்பும் கொள்ளலாகாது' என்று அவர் தெரிவித்தார்.

"அப்படியா! ஆப்கானிய தூது கோஷ்டி ஒன்று இங்கே தங்கியிருப்பது தாங்கள் சொல்லவே எனக்குத் தெரிந்தது' என்றார் ஜவஹர்.