பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

19

அமிர்தசரஸ் அக்கிரமம், ஜாலியன்வாலாபாக் படு கொலை பாரத தேசத்தையே ஒரு குலுக்குக் குலுக்கியது.

தேசத் தலைவர் பலரும் அமிர்தசரசுக்கு விரைந்து சென்றார்கள். துன்பத்துக்கு இலக்கான மக்களுக்கு உதவி செய்வதற்கென்று ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. பண்டித மதன் மோகன் மாளவியாவும் சுவாமி சிரத்தானந்தரும் அக்கமிட்டிக்குத் தலைமை தாங்கினர்.

ஜாலியன் வாலா பாக் படுகொலை பற்றி விசாரிக்க ஒரு கமிட்டியை நியமித்தது காங்கிரஸ். பண்டித மோதிலால் நேரு, தேசபந்து C.R. தாஸ் முதலியோர் அதிலே இடம் பெற்றனர். சி.ஆர். தாலாக்கு உதவியாக ஜவஹர்லால் நேரு நியமிக்கப் பட்டார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மூர்க்கச் செயல்களை அப்போது தான் ஜவஹர் அறிந்தார். அவரது உள்ளமும் கொதித்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் பகைத்தது. அங்குலம் அங்குலமாக வெறுத்தது. இந்த ஏகாதிபத்தியத் திற்கு சாவு மணி அடித்தாலன்றி இந்திய மக்களுக்கு உய்யும் வழியில்லை” என்று அறிந்தார்.

அவர் மாத்திரமா? அல்ல, அவரது தந்தையார் மோதிலால் நேருவும் மனம் மாறினார். பிரிட்டிஷ் நீதியின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை தகர்ந்தது. வேருடன் சரிந்தது; வீழ்ந்தது. பிரிட்டன் மீதிருந்த பாசம் அறுந்தது. மகன் மீதிருந்த பாசம் ஓங்கியது.

அது மாத்திரமல்ல, மகாத்மா காந்தியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அப்போது தான் நேருவுக்கு ஏற்பட்டது. பெரிய நேருவும், இளைஞர் நேருவும் காந்தியால் கவரப் பெற்றனர்.