பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

18

  • சுடு ' என்ருன் டயர், துப்பாக்கி முழக்கம் எங்கும்

நிறைந்தது. குண்டுகள் வெடி வெடி என வெடித்தன.

  • ஐயோ! ஐயோ!' என்ற தினக்குரல். எங்கும்

ஒலம் கூட்டத்தின் அழுகை வானைத் தொட்டது. ஆளுல்

டயரின் நெஞ்சைத் தொடவில்லையே! அந்தோ பரிதாபம் !

‘பொத்.பொத் என்று சுருண்டு விழுந்த மக்கள் எத்தனை, எத்தனை பேர் : சுவர் மீது ஏறிக் குருத்து தப்பித்து ஓடலாம் என்று ஏறிய மக்களையாவது டயர் விட்டானோ ? இல்லையே. குண்டுகளை அவர்கள் மீதும் அல்லவா கருணை இன்றி வீசினாள்.

குண்டுபட்ட பறவை சிறகையடித்துக் கொண்டு கீழே வீழ்வது போல் வீழ்ந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கையைக் கண்டும் என்ன செய்தான் ?

சுட்டான் ; சுட்டான் ; குண்டுகள் திரும் வரை சுட்டான் ; ஆத்திரம் தீரும் வரைச் சுட்டான் அந்தக் கிராதகன்.

நிரபராதியான மக்கள்; ஒரு பாவமும் அறியாத மக்கள், அவன் கொலை வெறிக்கு பலியாயினர். 379 பேர் மாண்டனர். 1200 பேர் படுகாயம் அடைந்தனர். அவன் கொலை வெறி இன்னும் அடங்கவில்லை. "துப்பாக்கியில் குண்டு இல்லையே” என்று ஏங்கினான். துப்பாக்கி இல்லாவிட்டால் என்ன ? பிரம்பு இருக்கிறதே !

நாடு எங்கும் இராணுவச் சட்டம் பிரகடனம் செய்யப் பட்டது. கெளரவம் வாய்ந்த பிரமுகர்கள், கண்ணியம் மிக்கவர்கள் என்று பாராமல் நடுத் தெருவிலே நிற்க வைத்துப் பிரம்பால் அடித்தான். துணியில்லாமல் நடுத் தெருவில் மண்டியிட்டுத் தவழ்ந்து போகச் சொன்னான். இன்னும் எவ்வளவோ கொடுமைகள் !