பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

35

மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்த்திருத்தத்தின்படி நடைபெற்ற முதல் தேர்தலை காங்கிரஸ் பகிஷ்கரித்துவிட்டது. அதன் பயன் என்ன ஆயிற்று? மிதவாதிகளும், சந்தர்ப்ப வாதிகளும் உள்ளே புகுந்தார்கள். இரண்டு கைகளையும் கூப்பி இவர்களை வரவேற்றது பிரிட்டிஷ் அரசாங்கம்; இவர்களைப் பாராட்டியது; கெளரவித்தது. போராட்ட சமயத்திலே காங்கிரஸை நசுக்குவதற்காக இவர்களை நன்கு பயன்படுத்தியது.

அதன் பிறகு என்ன ஆயிற்று? பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது சுய உருவைத் காட்டத் தொடங்கியது. மதிப்பு, மரியாதை எல்லாம் மாயமாய் மறைந்தன. இதனால் மனம் புண்பட்டனர் மிதவாதிகள், மந்திரி பதவியைத் துறந்தனர். சந்தர்ப்பவாதிகள் அட்டைபோல் ஒட்டிக்கெண்டனர். மந்திரி பதவி என்பது ஏலத்துக்கு வந்துவிட்டது. கடைச் சரக்காகி விட்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் வலை வீச தொடங்கியது.

தூண்டில்காரனுக்கு முள் மீது கண். அதே போல் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ஜவஹர் மீது கண். பதவி மோகம் என்ற மாய வலையை ஜவஹர் மீது வீசத் தொடங்கியது.

ஸ்ர். கிரிம்வுட் என்பவர் ஒர் ஆங்கிலேயர்; அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி. பாரிஸ்டராக தொழில் புரிந்த காலத்திலே இவர் முன் ஒரே ஒரு முறை ஆஜராகியிருந்தார் ஜவஹர். நேரடியான தொடர்பு எதுவும் கிடையாது. இருந்தாலும் ஜவஹருக்கு ஒரு கடிதம் எழுதினார் கிரிம்வுட், தம்முடன் அடிக்கடி தொடர்பு கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஜவஹர்லால் நேரு முனிசிபல் சேர்மன் ஆன பிறகு என்ன செய்தார் கிரிம்வுட்? அடிக்கடி வரத் தொடங்கினார்.