பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

45

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எப்படி இந்தியாவை சுரண்டுகிறது என்பது பற்றி அம்மகாநாட்டிலே பேசினார் ஜவஹர். இந்திய தேசீயத்தின் குரல் சர்வதேச அரங்கிலே முதன் முதலாக ஒலிக்கத் தொடங்கியது.

மகாநாட்டின் முடிவிலே லீக் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 'ஏகாதிபத்திய எதிர்ப்பு லீக்' என்று அதற்கு பெயர். அதன் நிர்வாகக் கமிட்டி அங்கத்தினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜவஹர். ஜார்ஜ் லான்ஸ்பரி, ஆல்பர்ட் ஐன்ஸ்டின், ரோமன் ரோலந்து மாடம் சன்யாட் சென் முதலியோரும் அந்தக் கமிட்டியில் இருந்தனர்.

ஆப்பிரிக்கா ஆசியா கண்டங்களில் உள்ள தேசீய இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்ள வேண்டும். அதற்கு வழி என்ன ? ஏகாதிபத்திய எதிர்ப்பு லீக் போல ஏதாவதொரு ஸ்தாபனமே வழி. எனவே ஏகாதிபத்திய எதிர்ப்பு லீகில் உற்சாகத்துடன் கலந்து கொண்டார் ஜவஹர்.

பிரஸல்ஸ் மகாநாடு முடிந்த உடனே இந்தியாவுக்குப் புறப்பட எண்ணியிருந்தார் ஜவஹர். ஆனால் அதற்குள் பெரிய நேரு ஐரோப்பா சென்று ஜவஹரைச் சந்தித்தார்.

பெரிய நேரு வந்துவிடவே இன்னும் சிலநாள் சுற்றலாம் என எண்ணினார் ஜவஹர். 'ருஷ்ய ஷக்குப் போகலாம்’ என்றார்.

"சரி' என்று புறப்பட்டார் பெரிய நேரு, எல்லோரும் ருஷ்யா சென்றனர். ருஷ்யாவில் சில தினங்கள் சுற்றிய பிறகு இந்தியா திரும்பினர்.

ஜவஹரின் அரசியல் கண்ணோட்டத்தில் இப்போது மாறுதல் ஏற்பட்டது. புரட்சிகரமான மாறுதல் சோஷலிசம் சர்வ தேசீயம் ஆகிய பின்னணியிலே சுதந்திர இந்தியாவை உருவாக்க விரைந்து வந்தார்.