பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

48

"பூரண சுயராஜ்யமே - அதாவது பிரிட்டிஷ் தொடர்பை அறுத்துக் கொள்வதே நம் லட்சியம்” என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார் ஜவஹர். தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது மகாத்மா இல்லை. பிறகுதான் இந்த லிஷயம் அவருக்குத் தெரிந்தது. மகாத்மா மனம் நொந்தார்.

'மிகவும் வேகமாகச் செல்கிறீர்கள். மிக மிக வேகம். இவ்வளவு வேகம் உதவாது' என்றார். சில வாரங்கள் சென்றன. அப்போதுதான் கருத்து வேற்றுமை பற்றி கடிதம் எழுதினார் காந்தி.

காந்திக்குத் தெரியும் ஜவஹர் தமக்கு எதிராக எதுவும் செய்யத் துணியமாட்டார் என்று. அதனால்தான் அம்மாதிரி கடிதம் எழுதினார்.

சுதந்திரப் போராட்டத்துக்கு காந்தியின் தலைமை அவசியம் என்று கருதினார் ஜவஹர். அதனால் காந்தியை விட்டு பிரிய மனம் வரவில்லை ஜவஹருக்கு. இவ்வாறாக இந்த மனிதகுல மாணிக்கங்கள் இரண்டும் தம் தம் நிலையை நன்கு அறிந்ததால் பிளவு என்பது ஏற்படவேயில்லை.

இந்த ஆண்டும் காங்கிரஸ் காரியதரிசி ஆனார் ஜவஹர் இளைஞர் உலகம் அவரை வரவேற்றது. இதய பீடத்தில் ஏற்றி வைத்துக் கொண்டாடியது. இளைஞர் மகாநாடுகள் பல நடைபெற்றன. அவற்றிலே 6೧ಶಿಫ್ಟಿ கொண்டார் ஜவஹர். சுதந்திரம், சோஷலிசம், சர்வ தேசீயம் முதலியன

பற்றி முழங்கினார்.