பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

50

முன்னதாகவே ஒத்திகைகள்! பொதுக் கூட்டங்கள்! ஊர்வலங்கள் சண்டமாருத பிரசாரம்!

கண்டது ਾਂ : கொண்டது நடுக்கம், பிறப்பித்தது 144 தடை! தடை! ஊர்வலங்களுக்குத் தடை.

நவம்பர் 29ம் தேதி சைமன் கமிஷன் லக்ஷமணபுரி வரும் நாள். அதற்கு முன்தினம் ஒரு வரவேற்பு ஒத்திகை நடத்த விரும்பினார் ஜவஹர்.

ஆனால் 144 தடை! என்ன செய்வது ? ஊர்வலத்துக் கேற்பட்ட தடையாயிற்றே! தொண்டர்கள் எல்லோரையும் வரிசையாக நிறுத்தினார். பதினாறு பேர் வீதம் பிரித்தார். இந்த அணிவகுப்பு 200 கஜத் துரத்தில் வந்துக் கொண்டிருக்க வேண்டியது என்று ஏற்பாடு செய்தார், முதல் அணி ஜவஹரின் தலைமையில் புறப்பட்டது. இரண்டாவது கோவிந்த் வல்லப பந்தின் தலைமையில் புறப்பட்டது. ஜன நடமாட்டமே அதிகம் இல்லாத தெருவழியே இந்தப் படை சென்று கொண்டு இருந்தது.

அப்போது திடீரென்று குதிரைகளின் குளம்பு சத்தம் கேட்டது. ஆம், குதிரை மீது ஏறிய போலீஸ் கண்ணிமை பொழுதில் வந்தது. சாத்வீகமாகச் சென்று கொண்டிருந்த தொண்டர்கள் மீது குதிரையை ஏவியது, போலிஸ், அடி! உதை! மண்டைகள் உடைந்தன ; ரத்தம் பெருக்கெடுத்து ஒடியது.

தொண்டர்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினார்கள் வீடுகளுக்குள் புகுந்தனர் சிலர். கடைகளுக்குள் ஓடினர் சிலர். அகப்பட்டவரை எல்லாம் அடித்து நொறுக்கியது குதிரைப் போலீஸ்,