பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

51.

ஜவஹர் மீது பாய்ந்தான் ஒருவன். ஒடி ஒளிய நினைத்தார் ஜவஹர். ஒரு கணம் தான் ; அடுத்த விநாடி சுய கெளரவம் வந்து குறுக்கே நின்றது. 'ஓடுவதா? ஓடுவதா ? சிச்சீ! உயிர் அவ்வளவு வெல்லமா? கோழை! கோழை! என்று சாடியது அவர் உள்ளம். தைரியம் பிறந்தது 'உம்' என்றார் உறுதியாக நின்றார். விழுந்தது பலமான அடி. அந்த நேரத்திலே அந்தச் சிறு உடல் அப்படியே நடுங்கியது. ஆனால் இம்மிகூட நகரவில்லை

சிறிது நேரம் சென்றது. முன்னே போய் நின்று கொண்டது குதிரை போலீஸ். ஊர்வலம் முன்னே செல்லாத படி வழியை அடைத்துக்கொண்டது.

சிதறி ஓடிய தொண்டர்கள் இதற்குள் வந்து சேர்ந்துவிட்டார்கள், மண்டையிலே காயம! துணி முழுவதும்

ரத்தக்கரை!

போலீஸ்-க்கு எதிர்ப்புறமாக எல்லோரும் உட்கார்ந்து விட்டனர். பெருங் கூட்டம் கூடிவிட்டது. பெரிய பெரிய அதிகாரிகள் எல்லோரும் வந்து விட்டனர். இருட்டிவிட்டது. முடிவில் சமரசம் ஏற்பட்டது. குதிரைப் போலீஸ் முன் செல்ல பின் சென்றது தொண்டர் படை,

நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தொலைபேசி மூலம் பெரிய நேருவுக்குத் தெரிவித்தார் ஜவஹர். பெரிய நேருவுக்குத் தூக்கம் வரவில்லை. லகஷ்மணபுரிக்குப் புறப்பட்டார். இாவு நேரம். அலகாபாத்திலிருந்து லகஷ்மணபுரி 145 மைல். விடியற்காலம் 5 மணிக்கு ஜவஹர் தங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். பிள்ளையைக் கண்ணால் கண்ட பிறகுதான் பெரிய நேருவுக்கு ஆறுதல் ஏற்பட்டது.