பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

52

அன்றைய தினம்தான் சைமன் கமிஷன் வரும் நாள். கோழி கூவுவதற்து முன்பே மக்கள் விழித்துக் கொண்டனர். பெருங் கூட்டமாக வந்து விட்டார்கள். கறுப்புக் கொடி ஊர்வலம் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் புறப்பட்டது.

அன்று. இன்னும் மூர்க்கத்தனமாக நடந்துக்கொண்டது போலிஸ் ஜவஹருக்கு நல்ல அடி! பந்துக்கும் நல்ல அடி, முதுகே நிமிர முடியவில்லை.

நல்ல வேளை தொண்டர் சிலர் ஜவஹரைத் தூக்கிக் கொண்டு போய் பத்திரமான இடத்தில் சேர்த்தனர், இன்றேல் பேராபத்து நேர்ந்திருக்கும்.

பத்தொன்பதாம் அத்தியாயம்

தந்தையா ? மகனா ?

1929ஆம் வருடம் பாரத தேசத்திலே எங்கு பார்த்தாலும் அரசியல் உணர்ச்சி மேலோங்கி நின்றது. எங்கும் துடிதுடிப்பு எங்கும் கிளர்ச்சி! எங்கும் ஆரவாரம் இளைஞர் மகாநாடுகள்! உழவர் மகாநாடுகள்! தொழிலாளர் மகாநாடுகள் இப்படி எங்கும் மகாநாடுகள்.

இந்திய மக்கள் எல்லோரும் விரும்பி ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் அரசியல் சட்டத்தை வகுப்பதில் முன்னைந்தார் பெரிய நேரு. இதற்கென்று ஒரு கமிட்டியும் நியமிக்கப்பட்டது ஸ்ர், தேஜ் பசதுர் சப்ரூ போன்றவர்களும் அக்கமிட்டியில் இருந்தனர். இந்தக் கமிட்டி ஓர் அறிக்கை தயார் செய்தது.