பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

58

இதற்குத் தான் . மீரட் சதி வழக்கு ' என்று பெயர். தொழிலாளர் இயக்க வரலாற்றிலே இது மிகவும் முக்கியமானது.

இந்த சமயத்திலே அகில இந்திய தொழிற் சங்கக் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜவஹர்.

மீரட் சதி வழக்கிலே கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் எதிர் வழக்காட முடிவு செய்தார். இதற்காக ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்தக் க மி ட் டி யி ன் தலைவர் மோதிலால் நேரு. வழக்கு சுமார் மூன்று ஆண்டுகள் நடைபெற்றது

பெரிய வக்கீல் என்று பெயர் பெற்ற பலரை வேண்டினார் ஜவஹர் அரசாங்கத்தை எதிர்த்து வழக்கை நடத்த வருமாறு அழைத்தார்,

ஆனால் பெரிய வக்கீல்களில் பலர் என்ன செய்தனர் ? பெருந் தொகை கேட்டனர். பணம் பிடுங்கிகளாக விளங்கினர். அவர்கள் வேண்டியது பீஸ் பீஸ் பீஸ் ! இதுவே அவர்களது ஜபம். எவன் எக்கேடு கெட்டால் என்ன ? பீஸ் இல்லாவிட்டால் வக்கீல்கள் வரமாட்டார்கள். எதிர் வழக்கு வக்கீலின்றி நடத்த முடியுமா ?

எனவே பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார் ஜவஹர். வேண்டுகோள் விடுத்தார். உலக தொழிற் சங்க ஸ்தாபனங்கள் பல உதவின. ஓரளவு நிதி சேர்ந்தது. வழக்கும் நடந்தது. முடிவு என்ன ? எல்லோரையும் சிறைக்குள்ளே தள்ளிவிட்டது அரசாங்கம்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தின் ஆணி வேர் ஆட்டம் கொண்டிருந்த இந்த சமயத்திலே மற்றுமொரு நிகழ்ச்சி, அவர்களை திணறச் செய்தது.