பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

62

கொண்டனர். உப்பு எடுக்கும் முயற்சியைக் கண்டு அரசாங்கம் வாளா இருக்குமா ? தன் அதிகாரத்தைப் பிரயோகித்தது. வட்டம் கலையவே இல்லை. அடிகள் சரமாரியாக விழுந்தன. அவை உடலைத் தாக்கினவே அன்றி உள்ளத்தின் உறுதியை மேன்மேலும் பலப்படுத்தின. இதை ஒட்டி என்ன நடந்தது ?

மே மாதம் ஐந்தாம் தேதி. இரவு மணி ஒன்று; தண்டியிலே ஒரு சிறு குடிசை. அதிலே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார் காந்தி. வந்து விட்டது போலீஸ் வண்டி, காந்தியைக் கைது செய்துக் கொண்டு, எரவாடா சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

பொழுது விடிந்தது. காந்தி கைது செய்யப்பட்ட சேதி காட்டுத் தீயாக பரவியது. பொங்கி எழுந்தது பார்தம் ! சர்க்காரின் செயலைக் கடுமையாகக் கண்டித்தது.

பம்பாய் வியாபாரிகள் ஹர்த்தால் செய்தார்கள் ; கடை அடைத்தார்கள். ஒரு வாரம் கடை திறக்கவே இல்லை. ஆலைத் தொழிலாளர்கள் ஐம்பதினாயிரம் பேர் வேலை செய்ய மறுத்தனர் ; வேலை நிறுத்தம் செய்தனர். -

அன்னிய துணியை மலைபோல் குவித்துத் தீக்கிரை இட்டனர் பலர். அன்னிய துணிக்கடைகளின் முன்னே காங்கிரஸ் தொண்டர்கள் சாத்வீக மறியல் செய்தார்கள்.

கடற்கரைப் பட்டினங்கள் பல உப்போ உப்பு ' என உப்பு உற்பத்தி யாத்திரை தலங்களாயின. தேசத் தொண்டர் பலர் அணி வகுத்துச் சென்றனர்; உப்புக் காய்ச்சினர்.

கடற்கரைச் செல்ல இயலாதவர்களோ, கடைக்குச் சென்றனர் ; காசு கொடுத்து உப்பு வாங்கினர்; ஒரு