பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74

இயக்கத்தை எப்படி தொடங்குவது ? காங்கிரசின் அனுமதி வேண்டுமோ ! மாகாண காங்கிரசின் நிர்வாகக் கமிட்டியைக் கூட்டினார். வ ரி கொடா இயக்கம் பற்றி ஆலோசித்தார். "நிலைமை எங்கே சாதகமாக இருக்கிறதோ அங்கே வரிகொடா இயக்கம் நடத்தலாம்” என்றது கமிட்டி.

அலகாபாத் ஜில்லாவிலே சூழ்நிலை மிகச் சாதகமாக இருந்தது. எனவே அங்கு இயக்கத்தைத் தொடங்க விரும்பினார் நேரு,

தொடங்குவது எப்படி ? இதைப்பற்றி யோசித்து ஒரு முடிவுக்கும் வந்தார். முதலில் அலகாபாத் ஜில்லாவிலுள்ள விவசாயிகளை ஒருங்கு திரட்டவேண்டும். வரி கொடா இயக்கம் பற்றி அவர்களுக்குச் சொல்லவேண்டும்.

எனவே, அலகாபாத் ஜில்லா விவசாயிகள் மகாநாடு ஒன்று கூட்ட ஏற்பாடு செய்தார். பின் முசோரிக்குச் சென்ருர் பெரிய நேருவை காண. அவருடன் கமலாவும் சென்ருர், இளைய நேருவைக் கண்டு மகிழ்ந்தார் பெரிய நேரு,

நான்கு நாட்கள் தந்தையுடன் இருந்தார் ஜவஹர். ஆனந்தமாகப் பொழுது போக்கினார். விளையாட்டு ! விளையாட்டு ; என்ன விளையாட்டு தெரியுமா ? காங்கிரஸ் விளையாட்டு.

ஜவஹரின் குழந்தை இந்திரா, விஜயலட்சுமியின் குழந்தை எல்லோரையும் வரிசையாக நிறுத்துவார் ஜவஹர். கையிலே தேசியகொடியைக் கொடுப்பார். ஊர்வலமாக வரச் சொல்வார். குழந்தைகள் கொடி பிடித்துக் கொண்டு வீட்டைச் சுற்றி வரும், ஜண்டா ஊஞ்சா ரஹேஹமாரா' என்ற பாட்டைப் பாடிக்கொண்டு ஜவஹர் அந்த ஊர்வலத்தின்