பக்கம்:சோஷியலிஸத்தின் சரித்திரம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோசியலிஷத்தின் சரித்திரம்


1.சோசியலிஸ்ட் சிந்தனைகள்

மனிதன் இந்த உலகத்தில் தோன்றி இரண்டு லட்சம் வருஷங்கள்‌ ஆயின. இந்தக்‌ கால அளவு எனது கற்பனை என்று நினைக்காதீர்கள்‌.விஞ்ஞானிகள் ஊக்கிது நிர்ணயித்தது என்று சொல்லப்படுகிறது. ஆயிரகணக்கான வருடங்களாக மனிதன் காட்டுமிராண்டித் தனத்தில் மூழ்கி கிடந்தான். சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் அவன் நாகரிகத்தின் உதய காலத்தைக் கண்டான்.


நாகரிகம் தோன்றிற்று. அதோடு சுயலாப சொத்துரிமையும் தோன்றிற்று. இதன் பயனாக உடையவன் - இல்லாதவன், ஆண்டை - அடிமை என்ற வர்க்க பிரிவினைகளும் ஏற்பட்டன. சமூகத்தில் துன்பமும் துயரமும், அடிமைத்தனமும் கொடும்கோன்மையும் இல்லாமையும் பொல்லாங்கும் தலைவிரித்தலாடயின. அதர்மத்தை ஒழித்து, தர்மத்தை நிலைநிறுத்த மஹாத்மாகளும் தீர்க்கதரிசிக்களும் பகிரத பிரயதனம் செய்ய வேண்டியதாயிற்று. சிஷ்டர்களை காக்கவும், துஷ்டர்களை தொலைக்கவும் வீராதி வீரர்களும் லோகோபாகாரிகளும் விண்ணையும் mannaiyum புரட்ட நேர்ந்தது.