பக்கம்:சோஷியலிஸத்தின் சரித்திரம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

கிரேக்க நாட்டின் பேரறிஞனகிய பிளாட்டோ எழுதிய "ரிப்புப்லீக்" (குடி அரசு) முதல் ஆங்கில அறிஞனகிய தாம்சமூர் எழுதிய "உட்டோப்பியா "(கற்பனை லோகம் ) வரை உள்ள பல அருமையான நூற்கள் யாவும், சமூக வாழ்வில் காணப்படும் தாறுமாரான நடவடிக்கைகளைச் சுட்டி காட்டுகின்றன. சமூக கேடுகளை ஒழிப்பதற்கான பல யோசனைகளையும் அவைகள் கூறுகின்றன. சோசியலிசதின் அம்சங்களும் அவைகளில் அடங்கிக் கிடக்கின்றன என்பதும் வாஸ்ததவம். ஆனால் அவைகளில் ஒன்றுக்கூட விஞ்ஞானரீதியாக சோசியலிஷத்தை வரையறுத்து கூறவில்லை.
முதலாளித்துவம் ஏற்பட்டது. அதனுடைய சாம்பிராதயங்களும் நடைமுறைகளும் பரவினா. சுய லாபச் சொத்துரிமை பெரும்பாலாருக்கு இல்லாமல் ஒழிந்தது. பண்டங்களை உற்பத்தி செய்வதற்கு அவசியமான சாதனைங்களை ஒரு சிலர் கையில் சீக்கின. உழைப்பு சக்தியை விற்று பிழைப்பு நடத்துகிற ஒரு தொழிலாளலி வர்க்கம் உதித்தது. இப்படிப்பட்ட தொழிலாளர் வர்க்கம் தோன்றிய பிறகும் வளர ஆரம்பித்தன. இதனால் தான் பட்டினியும் வர்க்க பேதமும் இல்லாத ஒரு சமூக அமைப்பை பற்றி கனவு காணத் துணிவு கொண்ட தாமஸ்மூர் போற்றிப் புகழ தக்காவராய் இருந்தபோதிலுங்கூட முதலாளித்துவம் பிறக்கும் முன்னர் (கி. பி 1516) அவருடைய "உட்டோப்பியா " பிரசூரிக்கப்பட்டதால், அது வெறும் கற்பனையாகவும் கதையாகவுமே போய்விட்டது.