பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 : செளந்தர்ய.

எண்ணமும் சொல்லும் ஒன்றை ஒன்று துரத்தி விளையாடுகின்றன. நான் ஜப்பான் விசிறி மாதிரி விரிந்துவிசிறித் துளும்புகிறேன்.

நெருப்பு என்றால் வாய் வேகவேண்டும் என்று எப்பவோ எழுதி, அப்படித்தான் என்னையே இன்னும் விளிக்கிறார்கள். சமீப காலமாக நானும் என்னை செளந்தர்ய உபாசகன் என்று சொல்லிக்கொள்கிறேன். சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். சொல்லிவிட்டேன். அனுபவமும் சொல்லும் அப்படி ஒன்றுபடவில்லை; ஒன்று படுவதற்குமில்லை. சொல் வேறு செயல் வேறுதான் என்று அறிகிறேன். சொல்லைப்பற்றிச் சிந்திக்கையில் செயலுக்குத் தனி பரிமாணம் கூடுகிறது. இப்போது முதலிலிருந்து சொல்கிறேன். உடலுக்கு மூலம் உயிர் உயிருக்கு மூலம் எண்ணம். எண்ணம் முற்றினால் சிந்தனை. சிந்தனைக்குக் கொடுப்பினை இருந்தால் தரிசனம். தரிசனம் காண்பது sopé5. What is beauty? §llah, G3 flipstair. Beauty is Truth. What is Truth? பைலேட் கேட்கிறான். இந்தக் கேள்விக்கு ஜன்மேதி ஜன்மமாய் விடை தேடிக் கொண்டிருக் கிறோம்.

என் வீட்டிற்கு அரை கிலோமீட்டர் தாண்டி ஒரு இட்லிக்கடை இருக்கிறது. ஒட்டல் இல்லை. இட்லிக்கடை காபி கூட கிடையாது. முதன் முதலாகக் கடைக்குப் போயிருந்த போது கடைக்காரர் அடுத்திருந்த தன் வீட்டிலிருந்து இட்லியை சூடாக எடுத்து வந்து இலையில் பரிமாறினார். நாற்பது பைசா வீதத்திற்கு இட்லியின் அளவு சிறியதுதான். ஆனால் அந்த பூ மெத்து வீட்டு இட்லியில் இல்லை. சற்று நேரம் கழிந்தபின் அவர் சொன்னார், “நீங்க ‘லா. ச. ராதானே?”

ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்?