பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 جيه செளந்தர்ய.

“பெரியவர் எங்கே?

"காலமாயிட்டாரு.”

எனக்குள் மெல்லிய அதிர்ச்சி.

நான்கு நாட்கள் கழித்து மறுபடி போனேன்.

என்னைப் பார்த்ததும் மாமி பெரியவரை கவனிச் சீங்களா என்று பரிவின் அவசரத்தில் விசாரித்தாள்.

நாலு இட்லியும் ஒரு மசால் வடையும் சாப்பிட்டேன். இப்போது இட்லி ஒரு ரூபாய் மசால்வடை ரூ. (அளவு கொஞ்சம் அநியாயம்தான்) பத்து ரூபாய் நோட்டை நீட்டினேன். மாமி மீதி சில்லறையை எடுத்து விரலைப் பிரித்து- பிடித்துக்கொண்டு உள்ளங்கையில் வைத்தாள்.

“பெரியவரே, இதோ.பாருங்க. இதோ மூணு ஒரு ரூபா காயின். இது ரெண்டு ரூபா. ஒரு ரூபான்னு நெனைச்சுக்கப் போlங்க சரியாப் போச்சா. ஜாக்ரதை, நான் வேணு மின்னா பாக்கட்லே போட்டுடட்டுமா? ஜாக்கிரதையாப் பாத்து போங்க.”

இந்த வயதில் இதுமாதிரி ஒரு ஆதரவும் எனக்குத் தேவையாய்த்தான் இருக்கிறது. அன்பான சொல், ஸ்பரிசமே ஆன்மாவுக்கு உறுதுணைதான். இந்த சம்பவத்திலேயே அழகு இல்லை.

இந்தப் பேச்சு, அது தரும் தைர்யம், உறுதுணை இதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு கம்யூனிகேஷனை உணர்கிறேன். அதன் செளந்தர்யம் ஆசிர்வதிக்கிறது. உணர்வதற்கு நுட்பமான சொரணை வேண்டும். மோன தடத்தில் ரஸவாதம் நடக்கிறது. உடலுக்குள் தெம்பு பாய்கிறது.

மழைநீரில் அமிழ்ந்த வயல்.