பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * iS

விசாரிக்கற துயரமா? இவளே ஒரு கோவர்த்தனகிரி. இதற்கே அவள் அஞ்சலிக்கு உரியவள். இத்தனை பாவம் பண்ண வேண்டுமா என்று சமுதாயம் சபிக்கிறது. அவள் அதற்கு மேல் மூன்றுமாதம் தங்கவில்லை. சமுதாயத்தின் சுயநலத் திற்கு விவஸ்தையும் கிடையாது. இரக்கமும் கிடையாது. முடிவும் கிடையாது.

மாசு என் வாழ்க்கையில் நுழைந்திராவிட்டால் ஜனனி கதைத்தொகுப்பே ஏற்பட்டிருக்காது. அதன் தொடர்பாக மற்ற நூல்களும் வந்திருக்காது. மந்தையோடு மந்தையாய் அநாமதேயமாய் கலந்து போயிருப்பேன். என் எழுத்தை முன்னுக்குக் கொண்டுவந்தவர் அவர்தான். நான் சொல்வது சுயநலப்பார்வை. ஆனால் மாசு என்கிற ஸ்படிகத்திற்கு வேறு முகப்புகளும் (Titles) இருந்தன. வாசகப் பேரவை ஒன்று கூட்டினார். இது பெரிய முயற்சிதான். நான் எதையுமே எதிர்பார்க்கவில்லை. இத்தனைபேர் வந்திருக் கிறார்கள். இதில் மூன்று நான்கு பேராவது தேறட்டுமே.

செய்யவேண்டுமென்று தோன்றியது, செய்தேன். கீதாச்சாரமே இதுதானே. நான் மாசு வீட்டுக்குப் போயிருந்தேன். ஜார்ஜ்டவுனில் இருந்தார். ஒரே வீட்டில் பதினெட்டு குடித்தனங்கள்- இருட்டும் வெளிச்சமும் சின்னதும் பெரியதுமாய். அவர் சொல்லுவார், ஆனால் ஒரு சண்டை பூசல் கிடையாது. விட்டுக் கொடுத்துக் கொள்வோம். நல்லதோ, பொல்லாதோ குடும்பத்துக்குக் குடும்பம் தோள் கொடுக்கும். முகூர்த்தமானாலும் சரி, அபகாரியமானாலும் சரி, வெளியாரை அழைக்கவே வேண்டாம். இது ஒரு community வாழ்க்கை” சந்தோஷ மாய்த்தானிருந்தது.

அவர் முயற்சியில், உழைப்பில் வெளிவந்த ஜனனி புத்தகம் மிக உயர்ந்த தயாரிப்பு. அந்தப் பேப்பரின் தரத்தில்