பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 25

வைத்து, புகைமண்டலம் சூளையை மட்டுமில்லாது எங்கள் விடுவரை சூழும். இரவு பூரா பானை வேகும். பரிகாசம் போலவே கடித்த பாம்பு பலபேர் அறிய மெத்த வீங்கி ஈரைந்து மாதமாக சுமந்த சூளை. காலையில் எழுந்து குயவர் சூளையைப் பார்க்க வருவார். துளையினுள்ளே கணகணப்பு. சிவனின் நெற்றிக் கண்ணின் சிவசிவப்பும் தெரியும். லேசாக ஒரு குச்சியால் பிரட்டினால் உடைந்த பானை விள்ளல்கள் உதிரும். எத்தனை உடைந்த பானைகள். மண் தன் நிறம்கூட மாறாமல் அரைவேக்காடுகள் எத்தனை விரிசல்கள். ஜன்மாவின் அருமையை இந்தச் சூழலில் இருந்தே தெரிந்து கொள்கிறேன். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அத்தனை பாடுபட்டும் இந்தச் சூளை கொடுத்த முழுப் பானைகள் எவ்வளவு தேறுகின்றனவோ? அதுதான் கணக்கு. ஆனால் அவர்களுக்கு அதனால் கசப்பு இல்லை. அதுதான் ஆத்மாவின் அழகு பொங்கல் வந்ததும் வீட்டிற்கு பெரியவர் வையாபுரி உடையார் அடித் தொப்புளிலிருந்து கத்துவார். தொப்புள் உள்வாங்குவது தெரியும். "அடேய் ஐயறு வீட்டுக்குப் புதுப்பானை, பச்சரிசியும், பருப்பும், காய்கறியும் அனுப்பிச்சீங்களாடா? அந்த மகாலட்சுமி நம்ப தெருவுக்கு வந்த ஆசீர்வாதத்தால்தான் நாம நல்லா யிருக்கறோம். அம்மாகிட்டே சொல்லு. இந்த பருப்பு வாங்கினதில்லே, வயல்லே வரப்புலே போட்டது.”

ஆனால் நாங்கள் இந்தப் பானையை உபயோகிக்க மாட்டோம். பழக்கமில்லை. பரம்பரை வெங்கலப்பானை தான். அரிசியும் உபயோகிக்க முடியாதவாறு புதுசு. 'மொழுக் மொழுக் கன மொத்தையாகிவிடும். அவர்கள் நடுமுற்றத்தில் அடுப்பு மூட்டி பொங்கலிட்டு (அப்படி