பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

敛

லா, ச. ராமாமிருதம் * 3?

மகாராஜபுரம் பாணி, செம்மங்குடி பாணி, செம்பை பாணி, அரியக்குடி பாணி, மதுரை சோமு பாணி- இப்படி அந்தந்த பாடகர்களின் தனிச்சிறப்பு அவர்கள் ஊரைச் சொன்னாலே பேரை அடையாளம் காட்டும் அளவிற்கு வழக்கில் வந்து விட்டன.

சில பிரசித்தங்களை அவர்கள் பெயர்களின் முதல் மூன்று எழுத்துக்களைச் சொன்னால் போதும். டி.கே.சி., ஜி.என்.பி. ஏ.வி.எம்., எம்.ஜி.ஆர்- சொல்லப்போனால் இந்த உதாரணங்களை பாஷையின் அலங்காரத்துக்கு எடுத்துக் காட்டாக சொல்லப் பிடிக்கவில்லை. ஆயினும் தற்காலத் திற்கு அவ்வப்போது வரவேண்டியிருக்கிறது.

பொதுவாக நாம் அறிய வேண்டியது யாதெனில் அலங்காரமின்றி பாஷையே இல்லை.

தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு. பாஷைகள் தோறும் அலங்காரம் வேறு. அவை இல்லாமல் அவளே இல்லை.

என் செயல் ஆவது ஒன்றுமில்லை. ஈசனே யாவதும் உன் செயலே.

ஒடி அலைந்து தேடி சோர்ந்துவிட்டபின் வந்த அந்த சொற்கள்- எனக்கு எப்படி இருக்கிறது தெரியுமா? கச்சேரி முழுக்கப்பாடி, கனராகம், ஆலாபனை, ஸ்வரப்ரஸ்தாரம், சங்கதிகள், ஆவர்த்தனம் அந்த நாட்களின், அந்தக்காலகாலப் பிரமாணப்படி பாடி ஒய்ந்து குரல் ஒருவிதமான நெருப்பு நகநகப்பில் நாதத்துடன் ஐக்யம் ஆய சரணாகதம் கவிதையின் உச்சக்கட்டம். என் செயல் ஆவது ஒன்று மில்லை எனும் நிலையில் கைகள் தொங்கிவிட்டமையால் ஆள் ஆஜானுபாகு. இதுவே சரணாகதத்தின் செளந்தர்யம்.